மணக்க மணக்க மசால் வடை வைத்து காரசாரமான காரக்குழம்பு! ருசித்து ருசித்து சாப்பிட ரெசிபி இதோ…

பெரும்பாலும் வீடுகளில் அம்மாவாசை, கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் வடை செய்வது வழக்கம்.. அதிலும் அனைவருக்கும் பிடித்தமான அதிக சத்துக்கள் நிறைந்த மசால் வடை செய்யும் பட்சத்தில் சில நேரங்களில் வடை வீதமாக வந்துவிடும். அந்த வடை வைத்து என்ன செய்வது என தெரியாத நேரங்களில் இதுபோல காரசாரமான குழம்பு ஒன்று வைத்து அடுத்த வேலை சாப்பாட்டை அசத்தி விடலாம். மசால் வடை வைத்து அசத்தலான குழம்பு செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ..

இந்த மசால் வடை குழம்பு செய்வதற்கு கடையிலிருந்து ஐந்து மசால் வடை வாங்கி அதை வைத்து உடனடியாக தயார் செய்யலாம். நாம் இப்பொழுது வீட்டிலேயே மாவு அரைத்து வடை செய்வதற்கான பக்குவத்தை பார்க்கலாம்.

முதலில் ஒரு கப் கடலைப்பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறி இருக்கும் பருப்பை மிக்ஸி ஜாரில் சேர்த்து பருப்பு வடை பக்குவத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு தேக்கரண்டி சோம்பு, ஐந்து பல் வெள்ளை பூண்டு, அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று, இரண்டு பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

மசால் வடைக்கு கூண்டு சேர்க்கும் பொழுது அதனை தட்டி சேர்த்துக் கொண்டால் சுவையாகவும் பாசமாகவும் இருக்கும்.

இப்பொழுது மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வடை பக்குவத்தில் தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு அகலமான கடாயில் குறித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானது நான் தட்டி வைத்திருக்கும் மசால் வடை உருண்டைகளை அதில் சேர்த்து பொன்னிறமாக முன்னும் பின்னும் பொரித்தெடுக்க வேண்டும். இப்பொழுது மசால்வடை தயாராக உள்ளது.

அடுத்ததாக குழம்பு தயார் செய்வதற்கு ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் வதங்கும் நேரத்தில் கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்துக்கொள்ள வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். தக்காளி வதங்கும் நேரத்தில் அரைத்து தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள், ஒரு தேக்கரண்டி தனியா தூள், ஒரு தேக்கரண்டி குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

எப்போதும் ஒரே மாதிரியாக முட்டை சாதம் செய்து போர் அடித்து விட்டதா? வாங்க முள்ளங்கி வைத்து ஹெல்தியான முட்டை சாதம் தயார் செய்யலாம்!

மசாலாக்களின் பச்சை வாசனை சென்றவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து குழம்பை கொதிக்க வைக்க வேண்டும். குழம்பு நன்கு கொதிக்கும் நேரங்களில் நாம் பொறித்து வைத்திருக்கும் மசால் வடையை சேர்த்துக் கொள்ளலாம்.

மசால் வடை சேர்த்த பிறகு குழம்பு ஒரு நிமிடம் கொதித்தால் போதுமானது.. இறுதியாக கைப்பிடி அளவு கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான குழம்பு. சூடான சாதத்துடன் இந்த குழம்பு வைத்து சாப்பிடும் பொழுது அவ்வளவு அமிர்தமாக இருக்கும். இந்த குழம்பு சாதத்துடன் அப்பளம் வைத்து சாப்பிட சிறப்பாக இருக்கும்.