நாவில் எச்சில் ஊற வைக்கும் மைசூர் ஸ்பெஷல் மசால் தோசை!ரெசிபி இதோ..

தோசை பெரியவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும். எப்போதும் ஒரே மாதிரியாக தோசை செய்து விதவிதமாக சட்னி செய்ய சிரமமாக இருக்கும் பொழுது இது போன்ற மசாலா தோசை செய்தால் மிக எளிமையாகவும் இருக்கும். வாங்க இந்த முறை நாவில் எச்சில் ஊரும் சுவையில் மைசூர் ஸ்பெஷல் மசால் தோசை எளிமையான முறையில் நம் வீட்டில் செய்வதற்கான விளக்கத்தை பார்க்கலாம்.

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி பழம், ஒரு சிறிய துண்டு இஞ்சி, அரை தேக்கரண்டி சீரகம், காலத்திற்கு ஏற்ப சாய்ந்தவர்கள் மூன்று முதல் ஐந்து, அரை தேக்கரண்டி கல்லுப்பு சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் நாம் அரைத்து வைத்திருக்கும் வெங்காய தக்காளி விழுதுகளை சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடம் வரை மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். அப்பொழுதுதான் மசாலாவின் பச்சை வாசனை போகும்.

அடுத்ததாக உருளைக்கிழங்கு செய்வதற்கு ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, அரை தேக்கரண்டி கடலைப்பருப்பு, அரை தேக்கரண்டி சீரகம், பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், சிறிய துண்டு இஞ்சி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்து இதில் பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளலாம். வெங்காயம் வதங்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளலாம். இந்த கலவையில் வேக வைத்து மசித்து எடுத்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு சேர்த்துக் கொள்ளலாம்.

நல்ல காரசாரமான ஆந்திரா ஸ்பெஷல் சிக்கன் புலாவ்! ரெசிபி இதோ…

தோசை கல்லை அடுப்பில் வைத்து மிதமான தீயில் நன்கு சூடுபடுத்திக் கொள்ள வேண்டும். இதில் லேசான பதத்தில் தோசைகளை வட்ட வடிவில் திரட்டி கொள்ளலாம். அதன் மேல் பக்கம் காரமான சட்னியை நன்கு பரப்பிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக உருளைக்கிழங்கு மசாலாவில் தடவிக் கொள்ளலாம். அதன் மேல் பக்கம் பொடியாக நறுக்கிய பச்சை வெங்காயத்தை தூவி பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் மைசூர் ஸ்பெஷல் மசாலா தோசை தயார்.

Exit mobile version