நல்ல காரசாரமான ஆந்திரா ஸ்பெஷல் சிக்கன் புலாவ்! ரெசிபி இதோ…

பொதுவாக புலாவ் என்றாலே காரம் சற்று குறைவாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் விதத்தில் இருக்கும். இந்த புலாவிற்கு காரமாக சைடிஸ் வைத்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும். இந்த முறை மாறாக நல்ல காரம் சேர்த்து ஆந்திரா ஸ்பெஷல் சிக்கன் புலாவ் எளிமையான முறையில் நம் வீட்டில் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…

முதலில் நமக்கு தேவையான சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு கப் கெட்டி தயிர் அல்லது மூன்று தேக்கரண்டி தயிர் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் இரண்டு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், இரண்டு தேக்கரண்டி தனியா தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலா, முக்கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக அரை மணி நேரத்திற்கு முன்பாகவே ஒரு கப் பார்ப்பது அரிசியை தேவையான அளவு தண்ணீர் கலந்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் நமக்கு தேவையான வெங்காயம் மற்றும் தக்காளிகளை நறுக்கி எடுத்துக் கொள்ளலாம்.

அரைமணி நேரத்திற்கு பிறகு ஒரு குக்கரின் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து சூடு படுத்தி கொள்ள வேண்டும். இதில் பிரியாணிக்கு தேவையான தாளிப்புகளை சேர்த்துக் கொள்ளலாம். அடுத்து நீலவாக்கில் பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை சேர்த்துக் கொள்ளலாம். பொன்னிறமாக வதங்கியதும் நன்கு பழுத்தை இரண்டு தக்காளி பழம் சேர்த்துக் கொள்ள வேண்டும். தக்காளி பாதியாக வதங்கியதும் இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ளலாம்.

அடுத்து அரை தேக்கரண்டி மஞ்சள்தூள், முக்கால் தேக்கரண்டி தனி மிளகாய் தூள், முக்கால் தேக்கரண்டி தனியா தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். மசாலா சேர்த்து பிறகு நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து மிதமான தீயில் மூடி போட்டு பத்து நிமிடம் வேக வைக்க வேண்டும்.

சுட சுட நல்ல காரசாரமான தயிர் சாதம்! யாருக்கும் தெரியாத ரகசிய ரெசிபி இதோ…

10 நிமிடம் கழித்து சிக்கன் ஒன்றும் பாதியாக வெந்து வரும் நேரத்தில் அரை மணி நேரம் ஊற வைத்திருக்கும் பாஸ்மதி அரிசி சேர்த்துக் கொள்ளலாம். இதற்கு தேவையான அளவு தண்ணீர் கலந்து இறுதியாக ஒரு முறை உப்பு சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இறுதி கட்டமாக பாதி அளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து கொடுத்து குக்கரை மூடிவிட வேண்டும்.

சரியாக 2 விசில்கள் வரும் வரை வேக வைத்து இறக்கினால் சுவையான ஆந்திரா ஸ்பெஷல் காரசாரமான புலாவ் தயார்.

Exit mobile version