பொதுவாக வெயில் காலங்களில் குளிர்ச்சிக்காக மட்டுமே தயிர் சாதம் அதிகமாக சாப்பிடப்பட்டது. இந்த முறை எப்போதும் போல சூடான சாதத்தில் தயிர் சேர்த்து எளிமையான தயிர்சாதமாக இல்லாமல் சற்று வித்தியாசமான முறையில் சுவை கூடுதலாக நல்ல காரத்துடன் சுடச்சுட தயிர் சாதம் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…
முதலில் நம் வீட்டில் சாதம் வடிக்கும் வழக்கமான பாத்திரத்தில் ஒரு கப் கெட்டி தயிர், இரண்டு கப் மோர், கூடுதலாக தேவையான அளவு தண்ணீர் கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் ஒன்றை கப் ஊறவைத்த அரிசியை சேர்த்து மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
அடுத்ததாக ஒரு சிறிய துண்டு இஞ்சி, 2 பச்சை மிளகாய் சேர்த்து உரலில் ஒன்று இரண்டாக இடித்துக் கொள்ள வேண்டும். நாம் தயிர் மற்றும் மோரில் வேகவைக்கும் சாதத்தை அவ்வப்பொழுது கவனித்துக்கொள்ள வேண்டும். முடிந்தால் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை பார்த்து கிளறி கொடுத்துக் கொள்ளலாம்.
இந்த முறை சமையலில் நாம் வேகவைக்கும் சாதம் தண்ணீருக்கு பதிலாக தயிர் மற்றும் மோரில் நன்கு வெந்து குலைந்து வரவேண்டும். அடுத்ததாக ஒரு சிறிய கடாயில் ஒரு தேக்கரண்டி நெய், அரை தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி கடுகு, ஒரு கொத்து கருவேப்பிலை, ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, நான்கு காய்ந்த வத்தல், நாம் இடித்து வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு தாளித்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது இந்த தாளிப்பை நம் சூடாக வேக வைத்திருக்கும் சாதத்தில் சேர்த்து கலந்து கொள்ளலாம். இப்பொழுது சுடச்சுட நல்ல காரசாரமான தயிர் சாதம் தயார். இறுதியாக கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து எடுத்தால் சுவையான தயிர் சாதம் சாப்பிட ரெடியாக உள்ளது.
முடி கொட்டுதல் மற்றும் இளநரைக்கு ஒரே தீர்வாகும் கருவேப்பிலை ஊறுகாய் ரெசிபி!
இந்த தயிர் சாதம் வழக்கமான தயிர் சாதத்தை போல குளிர்ச்சியாக இல்லாமல் சற்று சூடான சாதத்தில் அதுவும் தயிரில் வேகவைத்த சாதத்தில் தாளித்து சமைத்து இருப்பதால் சுவை வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருக்கும்.