ஒரே மாதிரியாக தேங்காய் சாதம் செய்யாமல் சற்று வித்தியாசமாக காரசாரமான தேங்காய் சாதம்!

பொதுவாக தேங்காய் சாதம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு வகையில் ஒன்று. இதற்கு காரணம் சற்று காரம் குறைவாக சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பதுதான். ஆனால் இந்த தேங்காய் சாதம் செய்யும் பொழுது கண்டிப்பாக காரமாக ஏதாவது ஒரு சைடிஷ் வைத்தே ஆக வேண்டும். இந்த முறை சற்று மாறுதலாக நல்ல காரசாரமான தேங்காய் சாதம் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் அரை கப் தேங்காய் துருவல், இரண்டு காய்ந்த வத்தல், அரை தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து முதலில் அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளலாம்.

ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி தேங்கா எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி கடலைப்பருப்பு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஐந்து காய்ந்த வத்தல், இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து கைப்பிடி அளவு முந்திரி, அரை தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளலாம். முந்திரி பொன்னிறமாக வரும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் நாம் அரைத்து வைத்திருக்கும் பொழுதுகளை கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இரும்பு சத்து குறைபாட்டை சரி செய்யும் தொக்கு ரெசிபி!

இதனுடன் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து தேங்காய் விழுதுவின் நிறம் மாறும்வரை நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். மிதமான தீயில் இரண்டு மூன்று நிமிடம் நன்கு கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக ஒரு கப் சாதம் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

கடைசியில் கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறி கொடுத்து இறக்கினால் சுவையான காரசாரமான தேங்காய் சாதம் தயார்.