இரண்டு தக்காளி, இரண்டு வெங்காயம் போதும் பத்தே நொடியில் அருமையான மசாலா புலாவ் தயார்!

காலை வேளையில் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் கொடுத்து விடவும் வேண்டும், அதுவும் குறைவான நேரத்தில் சுவையானதாகவும் இருக்க வேண்டும் என்பது தாய்மார்களின் விருப்பம். அந்த வகையில் மிக குறைவான நேரத்தை பயன்படுத்தி குழந்தைகளுக்கு பிடித்தமான சுவையில் எளிமையான மசாலா புலாவ் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம். புலாவ் செய்வதற்கு இரண்டு வெங்காயம் மற்றும் 2 தக்காளியே போதுமானது. மேலும் இந்த புலாவ் பத்து நிமிடத்தில் செய்து முடிக்க கூடியதாக இருப்பதால் எளிமையான முறையில் செய்து பள்ளி மற்றும் வேலைக்குச் செல்லும் நபர்களுக்கு கொடுத்து விடலாம். வாங்க அருமையான மசாலா செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…

இந்த புலாவ் செய்வதற்கு முதலில் மசாலா பொருட்களை தயார் செய்து கொள்ளலாம். அதற்காக ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு சிறிய துண்டு இஞ்சி, 5 பல் வெள்ளை பூண்டு, நீளவாக்கில் நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், நீளவாக்கில் நறுக்கிய இரண்டு தக்காளி பழம், கைப்பிடி அளவு புதினா மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்தது ஒரு அகலமான குக்கரில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் ஒரு சிறிய துண்டு பட்டை, இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய், சிறிதளவு கல்பாசி, ஒரு பிரியாணி இலை, , ஒரு அண்ணாச்சி பூ சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை குக்கரில் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது மசாலா பொருட்களை கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்.

அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒன்றரை தேக்கரண்டி தனியா தூள், ஒரு தேக்கரண்டி கறி மசாலா தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை செல்லும் வரை கிளற வேண்டும்.
மிதமான தீயில் குக்கரை லேசாக மூடி மசாலா பொருட்களை நன்கு கொதிக்க விட வேண்டும். அப்பொழுதுதான் வெங்காயம் மற்றும் தக்காளி இதனுடன் மசாலா பொருட்கள் ஒரு சேர கொதித்து பச்சை வாசனை இல்லாமல் நன்கு கொதித்து வரும்.

மசாலா நன்கு கொதித்து கரையோரங்களில் எண்ணெய் பிரியும் நேரங்களில் நாம் ஊற வைத்திருக்கும் அரிசியை சேர்த்துக் கொள்ளலாம். அரை மணி நேரம் முன்பாகவே பாஸ்பதி அரிசி அல்லது சீரக சம்பா அரிசியை நம் ஊறவைத்து கொள்ள வேண்டும்.

இந்த ஒரு தொக்கு போதும்! இட்லி, தோசை,சப்பாத்தி,சாதம் என எதற்கும் பஞ்சமே இல்லாமல் அல்டிமேட் ஆக அசத்தும் ரெசிபி இதோ!

அந்த வகையில் மசாலா தயாரானதும் ஊற வைத்திருக்கும் அரிசியை மீண்டும் ஒருமுறை கழுவி சுத்தம் செய்து குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக ஒரு முறை உப்பு சரிபார்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

இப்பொழுது குக்கரை மூடி விதமான தீயில் 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். மூன்று முதல் நான்கு விசில்கள் வந்ததும் அடுப்பை அணைத்து விடலாம். குக்கரில் அழுத்தம் குறைந்ததும் மூடியைத் திறந்து இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான மசாலா புலாவ் தயார்.

இந்த புலாவ் செய்வதற்கு எந்த காய்கறிகளும் பட்டாணி,மீல்மேக்கர் என எதுவும் சேர்க்காமல் பிரியாணியின் அதை சுவையில் அருமையாக இருக்கும். பிரியாணி வாசத்தில் இருக்கும் இந்த மசாலா புலாவ் மதியான வேலை லஞ்ச் பாக்ஸ் இருக்கு சிறந்த உணவாக இருக்கும்.