நல்ல காரசாரமாக ரோட்டு கடை ஸ்டைல் மசாலா முட்டை தோசை! ரெசிபி இதோ….

பொதுவாக தோசை பெரியவர்களுக்கு முட்டை தோசை மீது தனி விருப்பம் தான். இந்த முறை அப்படி செய்யும் முட்டை தோசையை எப்போதும் போல ஒரே மாதிரியாக முட்டையை உடைத்து சேர்த்து ஊற்றி அப்படியே சேர்க்காமல் சற்று வித்தியாசமாக நல்ல மசாலா சேர்த்து காரசாரமாக செய்வதற்கான ரெசிபி விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…

முதலில் மசாலா முட்டை தோசை செய்வதற்கு தேவையான மசாலாவை தயார் செய்து கொள்ளலாம். ஒரு மிக்ஸி ஜாரின் 10 முதல் 15 சின்ன வெங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் இரண்டு பல் வெள்ளை பூண்டு, , கால் தேக்கரண்டி மிளகாய் தூள், கால் தேக்கரண்டி மிளகுத்தூள், இரண்டு சிட்டிகை உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டைகளை சேர்த்து நன்கு அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். முட்டைகள் நன்கு அடித்த பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா விழுதுவை அதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது முட்டை மசாலா தயாராக மாறியுள்ளது.

கொழுக்கொட்டை போல இருந்தாலும் சாப்பிட பப்ஸ் போல இருக்கும் டீக்கடை ஸ்நாக்ஸ்!

இப்பொழுது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எப்போதும் போல பொதுவான தோசை ஒன்று செய்து கொள்ளலாம். அதன் மேல் பக்கம் நாம் தயார் செய்து வைத்திருக்கும் முட்டை மற்றும் மசாலா கலவையை எல்லா பக்கமும் வரும் வகையில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கடைசியாக தாராளமாக நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து பொன்னிறமாக முன்னும் பின்னும் வரும் வரை வேக வைத்து எடுத்தால் சுவையான மசாலா முட்டை தோசை தயார். இந்த தோசைக்கு தனியாக சட்னி சாம்பார் என எந்த சைடிஷ்சும் தேவைப்படாது அப்படியே சாப்பிட்டுவிடலாம்.