இட்லி, ஆப்பம், பூரி, இடியாப்பத்திற்கு வைத்து சாப்பிடக்கூடிய மசாலா குருமா! ரெசிபி இதோ…

இட்லி மற்றும் பூரிக்கு வழக்கமாக சாப்பிடும் சட்னி, சாம்பார், கிழங்கு வகைகளை விட சற்று வித்தியாசமாக குருமா வைத்து சாப்பிடும் பொழுது தனி சுவை கூடுதலாக சிறப்பாக இருக்கும். இந்த குருமா இட்லி மற்றும் பூரிக்கு மட்டுமில்லாமல் ஆப்பம், இடியாப்பம் என அனைத்திற்கும் கச்சிதமான பொருத்தமாகவும் இருக்கும். வாங்க மசாலா குருமா எளிமையான முறையில் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் குருமா செய்வதற்கு தேவையான மசாலா பொருட்களை தயார் செய்து கொள்ளலாம். இதற்காக ஒரு மிக்ஸி ஜாரில் கைப்பிடி அளவு தேங்காய், கைப்பிடி அளவு முந்திரி பருப்பு, ஆறு முதல் ஏழு வெள்ளை பூண்டு, ஒரு சிறிய துண்டு இஞ்சி, இரண்டு தேக்கரண்டி வேர்க்கடலை, இரண்டு தேக்கரண்டி பொரிகடலை, அரை தேக்கரண்டி சோம்பு, பட்டை ஒரு சிறிய துண்டு, கிராம்பு இரண்டு, ஏலக்காய் 2, கசகசா அரை தேக்கரண்டி சேர்த்து நன்கு மையாக அரைத்தெடுக்க வேண்டும்.

அரைக்கும் பொழுது தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இப்பொழுது ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானது ம் இரண்டு துண்டு பட்டை, அரை தேக்கரண்டி கடுகு, இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் பொடியாக நறுக்கிய இரண்டு வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் இரண்டு அல்லது மூன்று பச்சை மிளகாய் இரண்டாக கீரி சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி பழங்கள் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

தக்காளி நன்கு வெந்து மசிந்து வரும் நேரத்தில் உருளைக்கிழங்குகளை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். நம் தேவைக்கேற்ப இரண்டு அல்லது மூன்று உருளைக்கிழங்குகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கு எண்ணெயோடு பாதியாக வெந்து வரும் நேரத்தில் மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.

சத்து நிறைந்த சிறுதானியங்களில் ஒன்றான வரகு அரிசி வைத்து கரசரமான இறைச்சி சோறு!

இதற்காக தனி மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி, தனியாத்தூள் ஒரு தேக்கரண்டி, மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ள வேண்டும். அடுத்ததாக நாம் அரைத்து வைத்திருக்கும் பொழுதுகளை சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

இப்பொழுது தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு கலந்து மிதமான தீயில் 10 முதல் 15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான மசாலா குருமா தயார்.

Exit mobile version