சத்து நிறைந்த சிறுதானியங்களில் ஒன்றான வரகு அரிசி வைத்து கரசரமான இறைச்சி சோறு!

சிறுதானிய வகைகளை மருந்து போல மாதத்திற்கு ஒருமுறை எடுத்துக் கொள்ளாமல் வெள்ளை சாதம் போல தொடர்ந்து சாப்பிடும் பொழுது உடலுக்கு பலவிதமான ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைத்து நோய் இல்லாமல் வாழ முடியும். சிறு தானியங்களை வைத்து புது விதமாக சமைத்து ஊட்டச்சத்துகளை பெற விரும்புபவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும். அந்த வகையில் இன்று வரகு அரிசி வைத்து காரசாரமான இறைச்சி சோறு செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…

முதலில் ஒரு மிக்ஸி ஜாரின் காரத்திற்கு ஏற்ப 4 அல்லது 5 பச்சை மிளகாய், ஒரு சிறிய துண்டு இஞ்சி, வெள்ளைப் பூண்டு பத்து சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்த நமக்கு விருப்பமான இறைச்சியை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் இப்பொழுது அரைத்த விழுதுகள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி தனியா தூள், இரண்டு தேக்கரண்டி கரம் மசாலா தூள், தேவையான அளவு உப்பு கலந்து 2 மணி நேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும்.

அடுத்ததாக ஒரு கப் வரகு அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு குக்கரில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, , ஏலக்காய், கல்பாசி சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக நீளவாக்கில் பொடியாக நறுக்கிய இரண்டு வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் இரண்டு தக்காளி கொடியாக நறுக்கி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். தக்காளி நன்கு மசிந்து வரும் நேரத்தில் ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

மிளகாய் தூளில் பச்சை வாசனை சென்றவுடன் நம் ஊற வைத்திருக்கும் இறைச்சியை சேர்த்துக் கொள்ள வேண்டும். இறைச்சி சேர்த்து நன்கு வதக்கி கொடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை நான்கு விசில்கள் வரும் வரை வேக வைத்துக் கொள்ளலாம்.

மீனவர்களின் பீட்சா என செல்லமாக அழைக்கப்படும் அட்லப்பம்! ரெசிபி இதோ…

நான்கு விசில்களுக்குப் பிறகு இறைச்சியை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது மீதம் இருக்கும் தண்ணீரை அளந்து கொள்ள வேண்டும். அதாவது ஒரு கப் வரவு அரிசிக்கு இரண்டு அரை கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.

அதற்கு ஏற்றார் போல் இறைச்சி வேக வைத்த தண்ணீர் மற்றும் கூடுதலாக தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஊற வைத்த வரகரிசி, வேகவைத்த கறி, கூடுதலாக கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி கிளறி மூடி போட்டு வேக வைக்க வேண்டும். இரண்டு விஷல்கள் வரும் வரை வேக வைத்து இறக்கினால் சுவையான வரகு அரிசி இறைச்சி சோறு தயார்.

Exit mobile version