மீனவர்களின் பீட்சா என செல்லமாக அழைக்கப்படும் அட்லப்பம்! ரெசிபி இதோ…

சென்னை காசிமேட்டில் மிகவும் பிரபலம் அடைந்த இந்த அட்லப்பம் மீனவர்களின் பீட்சா என செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறது. பழங்காலத்து ரெசிப்பிகளில் ஒன்றான இந்த அட்லப்பம் ஒருமுறை நம் வீட்டில் சாப்பிட வேண்டும் என நினைப்பவர்களுக்கு எளிமையான ரெசிபி இதோ…

ஒரு அகலமான கடாயில் மூன்று தேக்கரண்டி ரவை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அதே கடாயில் முக்கால் கப் வெல்லம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு கரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் அரிசி மாவு, வறுத்த ரவை மூன்று தேக்கரண்டி, கரைத்த வெல்லம், ஒரு மணி நேரம் ஊற வைத்த கடலைப்பருப்பு இரண்டு தேக்கரண்டி, அரைத்த கரண்டி ஏலக்காய் தூள், ஒரு சிட்டிகை உப்பு, அரை தேக்கரண்டி ஆப்ப சோடா, நெய்யில் வறுத்த தேங்காய் சில் கைப்பிடி அளவு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

தேவையான அளவு தண்ணீர் கலந்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து மற்றொரு பாத்திரத்தில் இரண்டு முட்டைகளை உடைத்து சேர்த்து நன்கு அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

10 நிமிடத்தில் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் ஆப்தானி எக் மசாலா! அட்டகாசமான ரெசிபி இதோ…

இப்பொழுது ஒரு அகலமான தட்டில் நெய் அல்லது எண்ணெய் உள்பக்கமாக தடவி கொள்ள வேண்டும். அடுத்ததாக நாம் தயார் செய்து வைத்திருக்கும் மாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மேல் பக்கம் இரண்டு முட்டைகளை உடைத்து சேர்த்துக் கொள்ளலாம். அதன் மேல் அலங்காரத்திற்காக நெய்யில் வறுத்த தேங்காய் சில்களை பரப்பிக் கொள்ள வேண்டும்.

கூடுதலாக நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சைகளை சேர்த்து அலங்காரம் செய்து கொள்ளலாம். இப்பொழுது அகலமான பாத்திரத்தில் அடியில் ஒரு தட்டு வைத்து பத்து நிமிடம் சூடுபடுத்திக் கொள்ள வேண்டும். அடுத்து நாம் தயார் செய்து வைத்திருக்கும் பாத்திரத்தை அதனுள் வைத்து மூடி போட்டு 20 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும். இப்பொழுது சுவையான அட்லப்பம் தயார்.

Exit mobile version