கோழிக்கோடு ஸ்பெஷல் தேங்காய் எண்ணெய் மீன் வருவல் ரெசிபி!

மீன் வருவல் பொதுவாக பலருக்கு பிடித்த உணவாக இருந்தாலும் இடத்திற்கு இடம் இதன் சுவை மற்றும் மனம் மாறுபடுவது உண்டு. மீனிங் தன்மையை பொறுத்து சுவை மாறுபட்டாலும் அதன் மேல் சேர்க்கப்படும் மசாலாவிற்கும் தனி மதிப்பு உள்ளது. இந்த முறை கோழிக்கோடு ஸ்பெஷல் தேங்காய் எண்ணெய் மீன் வருவல் மசாலா நம் வீட்டிலேயே எளிமையான முறையில் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…

முதலில் மீன் வறுவலுக்கு தேவையான மசாலா தயார் செய்து கொள்ளலாம். ஒரு மிக்ஸி ஜாரில் 10 முதல் 15 பல் வெள்ளை பூண்டு, ஒரு சிறிய துண்டு இஞ்சி, 3 பச்சை மிளகாய், 20 சின்ன வெங்காயம், ஒன்றரை தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு அகலமான பாத்திரத்தில் கால் கப் காஷ்மீரி மிளகாய், தேவையான அளவு உப்பு, நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா விழுது, நான்கு தேக்கரண்டி தனியாதூள் சேர்த்து மசாலாவை ஒரு சேர கலந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் மீனை மசாலாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்படி மசாலாவுடன் மீனை குறைந்தது 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

காயல்பட்டினம் ரம்ஜான் ஸ்பெஷல் அக்காரா புளிப்பு! பாரம்பரிய ரெசிபி இதோ…

அடுத்து ஒரு அகலமான கடாய் அல்லது தோசை கல்லில் தாராளமாக தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது மசாலாவுடன் ஊற வைத்திருக்கும் மீனை எண்ணெயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெயுடன் மீனை பொறிக்கும் பொழுது இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து பொறித்தால் வாசனை கூடுதலாக இருக்கும்.

முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரிந்து வரும் வரை வேக வைத்து எடுத்தால் சுவையான மீன் வருவல் தயார். தேங்காய் எண்ணெயில் நல்ல மசாலாவுடன் இந்த மீன் பொரிந்து சாப்பிடுவதற்கு சரியான பக்குவத்தில் இருக்கும்.