மாலை நேரங்களில் டீ மற்றும் காபி குடிக்கும் பொழுது அதற்கு ஸ்னாக்ஸ் வைத்து சாப்பிடும் பழக்கத்தினால் பிரட் வைத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவது வழக்கம். அப்படி சாப்பிடும் பிரட் வெறுமையாக இருப்பதைவிட சற்றே வித்தியாசமாக சுவை கூடுதலாக இருக்கும் பொழுது குழந்தைகள் விரும்பி சற்று கூடுதலாக சாப்பிடுவார்கள். இந்த முறை 10 நிமிடத்தில் செய்யக்கூடிய மசாலா பிரட் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…
முதலில் மசாலா பிரட் செய்வதற்கு தேவையான மசாலா பொருட்களை தயார் செய்து கொள்ளலாம். அதற்காக ஒரு மிக்ஸி ஜாரில் பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம், காரத்திற்கு ஏற்ப ஒரு பச்சை மிளகாய், ஒரு சிறிய துண்டு இஞ்சி, இரண்டு வெள்ளை பூண்டு, ஒரு கொத்து கருவேப்பிலை, சிறிதளவு கொத்தமல்லி, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டு முட்டைகளை உடைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். மசாலாவும் முட்டையும் ஒரு சேரும் வரை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு கொள்ளு பருப்பு வைத்து புதுமையான ரெசிபி இதோ…
அடுத்ததாக நமக்கு தேவையான பிரெட்டுகளை எடுத்து இந்த மசாலா கலவையில் முன்னும் பின்னும் தடவி தோசை கல்லில் சேர்த்துக் கொள்ளலாம். பிரட் தயார் செய்யும் பொழுது எண்ணெய்க்கு பதிலாக வெண்ணெய் சேர்த்து தயார் செய்தால் சுவை சற்று கூடுதலாக இருக்கும். வெண்ணெய் இல்லாத பட்சத்தில் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
இப்படி உண்ணும் பின்னும் பொன்னிறமாக வரும் வரை வேக வைத்து எடுத்தால் அருமையான மசாலா பிரட் தயார். வழக்கமான பிரட் போல அல்லாமல் இது முட்டை சேர்த்து சுவை கூடுதலாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இதை ஸ்நாக்ஸ் ஆக மட்டுமில்லாமல் காலை உணவாகவும் சாப்பிடலாம்.