வீட்டில் யாருக்காவது இருமல், தும்மல், சளி, உடல் அசதி ஏற்பட்டால் பாட்டியும் கை மருந்தான மருந்து குழம்பு ரெசிபி!

கிராமங்களில் வீட்டில் யாருக்காவது உடல் அசதி, சளி, காய்ச்சல், வயிறு சரி இல்லாமை, பசியின்மை போன்ற கோளாறுகள் ஏற்படும் நேரங்களில் ஆஸ்பத்திரி மருந்து மாத்திரை என சொல்லாமல் வீட்டிலேயே எளிமையான முறையில் மருந்து குழம்பு வைத்து உடலில் ஏற்படும் சில பிரச்சனைகளை சரி செய்து கொள்ள முடியும். இந்த அற்புதமான மருந்து குழம்பு செய்வதற்கான எளிமையான ரெசிபி இது.

ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி வெள்ளை கடுகு, ஐந்து , முதல் 7 பல் வெள்ளை பூண்டு, ஒரு சிறிய துண்டு சுக்கு சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். வறுக்கும் நேரத்தில் கடுகு நன்கு பொறிந்து வந்து வாசனை வந்தால் போதுமானது.

அந்த பக்குவத்தின் அடுப்பை அணைத்து விடலாம். வறுத்த இந்த பொருட்களை சிறிது நேரம் ஆற வைக்க வேண்டும். அதன் பின் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக பொடி செய்து கொள்ளலாம்.
அடுத்ததாக அதே கடாயில் மூன்று தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அடுத்ததாக பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்ந்து வதக்க வேண்டும்.

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் பழுத்த இரண்டு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி கடாயில் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். தக்காளி மற்றும் வெங்காயம் நன்கு வதங்கி குழைந்திருக்க வேண்டும்.

அடுத்ததாக அரை தேக்கரண்டி மஞ்சள், இரண்டு தேக்கரண்டி குழம்பு மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை அடக்கிக் கொள்ளவும். அடுத்து கடாயில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் குழம்பிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த கலவையை இரண்டு நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். அதன் பின் எலுமிச்சை பழ அளவு ஊறவைத்த புளி கரைசல் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனுடன் நான் முதலில் வறுத்து அரைத்து வைத்திருக்கும் மசாலாவையும் சேர்த்துக் கொள்ளலாம்.

உடல் எடை குறைத்தல், சிறுநீரக கல் பிரச்சினை சரி செய்தல் என பல மருத்துவ பயன்கள் கொண்ட வாழைத்தண்டு வைத்து அருமையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி!

மீண்டும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குழம்பை நன்கு ஒரு முறை கலந்து கொடுத்து மூடி போட்டு கொதிக்க வைக்க வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் மிதமான தீயில் இந்த குழம்பு நன்கு கொதித்து வர வேண்டும்.

15 நிமிடம் கழித்து கடாயின் ஓரங்களில் எண்ணெய் புரிந்து வந்தால் குழம்பு தயாராக மாறிவிட்டது. இறுதியாக கைப்பிடி அளவு கருவேப்பிலை மற்றும் மல்லி இலைகளை சேர்த்து இறக்கினால் சுவையான மருந்து குழம்பு தயார்.