இன்றைய நாளில் உடல் எடை அதிகரித்தல் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உள்ள பொதுவான ஒரு குறைபாடாகும். உடல் ரீதியான அசைவுகள் விளையாட்டு என எந்த பயிற்சியும் இல்லாததன் காரணமாக தற்பொழுது உடல் எடை அதிகரித்தல் என்பது இயல்பான ஒன்றாக உள்ளது. அதிகரிக்கும் இந்த உடல் எடையின் காரணமாக உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு பலவிதமான நோய்களுக்கு காரணம் வகிக்கிறது. உடல் எடையை கருத்தில் கொள்ளும் பல நபர்கள் தங்கள் எடையை குறைக்க வேண்டும் என நினைத்து வருகின்றனர். வாரத்தில் மூன்று முதல் நான்கு நாட்கள் மஞ்சள் பூசணியை வைத்து கறி சமைத்து சாப்பிட்டு வரும் பொழுது உடலில் எடையை கட்டுப்பாட்டில் வைக்க முடியும். அந்த வகையில் சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு ஏற்ற மஞ்ச பூசணி கிரேவி செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…
முதலில் ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி வேர்க்கடலை, ஒரு கொத்து கருவேப்பிலை, ஒரு கப் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் துருவல் பொன்னிறமாக மாறி வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளலாம். இப்படி வருத்த பொருட்களை சிறிது நேரம் சுடுதண்ணியை வைத்துவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி கடலைப்பருப்பு, 5 பல் வெள்ளை பூண்டு இடித்து சேர்த்து தாளித்து கொள்ளவும்.
அடுத்ததாக நீளவாக்கில் நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், இரண்டாக கீறிய இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இரண்டு கப் மஞ்சள் பூசணி துண்டுகளை சேர்த்துக் கொள்ளலாம்.
எண்ணெயோடு சேர்த்து பூசணியை ஒரு முறை கிளறி கொடுக்க வேண்டும். இதனுடன் அரை தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள் சேர்த்து மசாலா வாசனை செல்லும் வரை கிளற வேண்டும்.
அதன் பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து பூசணிக்காயை வேக வைக்க வேண்டும். மிதமான தீயில் ஐந்து நிமிடம் வேக வைத்தால் பூசணிக்காய் நொடியில் வந்துவிடும். பூசணிக்காய் வெந்து இருப்பதை உறுதி செய்த பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் வேர்கடலை விழுதுகளை சேர்த்து ஒரு முறை கிளற வேண்டும்.
இந்த நேரத்தில் மீண்டும் ஒரு முறை உப்பு சரிபார்த்துக் கொள்ளலாம். இறுதியாக ஒரு தேக்கரண்டி நாட்டு சக்கரை சேர்த்து கிளறி கொடுத்து இறக்கினான் சுவையான மஞ்சள் பூசணி தொக்கு தயார். இந்த தொக்கு சூடான சாதம் மற்றும் சப்பாத்தியுடன் வைத்து சாப்பிடும் பொழுது அருமையாக இருக்கும். மேலும் இந்த கிரேவியை எவ்வளவு அதிகமாக சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காது.