ட்ரெண்டிங்கில் இருக்கும் பச்சை மாங்காய் ரசம், பூண்டு துவையல் ரெசிபி இதோ….

இன்றைய காலங்களில் மாலை நேர சீரியல்களின் சிலவகையான ரெசிப்பி வகைகள் அவ்வப்போது ட்ரெண்டிங் செய்யப்படுவதும் அதை தொடர்ந்து அதை சாப்பிடும் ஆர்வம் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் உணவு பிரியர்களுக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது. இந்த முறை சமீப காலமாக ட்ரெண்டிங்கில் இருக்கும் பச்சை மாங்காய் ரசம் மற்றும் பூண்டு துவையல் எளிமையான முறையில் அதை சுவையில் நம் வீட்டில் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…

முதலில் ரசம் வைப்பதற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளலாம். ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம், பொடியாக நறுக்கிய ஒரு கப் மாங்காய், சின்ன வெங்காயம், 5 பல் வெள்ளை பூண்டு, பச்சை மிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு இடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். மிக்ஸி ஜாரில் அரைப்பதாக இருந்தால் பரபரவென அரைத்துக் கொள்ளலாம்.

அடுத்து ஒரு குக்கரில் கைப்பிடி அளவு துவரம் பருப்பு கழுவி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் பெரியதாக நறுக்கிய மூன்று அல்லது நான்கு மாங்காய் துண்டுகள் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து ஐந்து விசில்கள் வரும் வரை மிக வைத்துக் கொள்ளலாம்.

ஐந்து விசில்கள் வந்து குக்கரில் அழுத்தம் குறைந்த பிறகு குக்கரை திறந்து மாங்காவின் தோள்களை மட்டும் நீக்கி மாங்காவின் சதை பகுதி மற்றும் பருப்பை மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக கடாயின் அரை தேக்கரண்டி எண்ணெய், அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி உளுந்து மற்றும் கடலை பருப்பு, இரண்டு காய்ந்த வத்தல், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக நாம் எடுத்து வைத்திருக்கும் மிளகு சீரக பூண்டு கலவைகளை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு நிமிடம் என்னோடு சேர்த்து நன்கு வதக்கிய பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் கலந்து கொள்ள வேண்டும்.

இறுதியாக நாம் வேகவைத்து மசித்து வைத்திருக்கும் பருப்பு சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து கொடுத்து மிதமான தீயில் சூடுபடுத்த வேண்டும்.

ரசம் தயாராகி கொதி வரும் நேரத்தில் அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்பொழுது சுவையான மாங்காய் ரசம் தயார் அடுத்ததாக பூண்டு துவையல் செய்வதற்கான விளக்கத்தை பார்க்கலாம்.

நாவில் எச்சில் ஊற வைக்கும் மைசூர் ஸ்பெஷல் மசால் தோசை!ரெசிபி இதோ..

ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து 20 முதல் 25 வெள்ளைப் பூண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும். வெள்ளைப் பூண்டு சேர்த்து 20 நிமிடம் கழித்து 10 முதல் 15 சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். இப்பொழுது வதக்கிய பொருட்களை தனியாக ஒரு தட்டிற்கு மாற்றிவிட வேண்டும்.

அடுத்ததாக அதே கடாயில் கூடுதலாக ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி தனியா, ஒரு தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி வெந்தயம், மூன்று காய்ந்த வத்தல், சிறிய நெல்லிக்காய் அளவிற்கு புளி, ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது நாம் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் அரை தேக்கரண்டி வெல்லம் சேர்த்து மையாக அரைத்து எடுத்தால் சுவையான பூண்டு சட்னி தயார்.