பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் குழந்தைகள் முதல் வேலைக்கு செல்லும் நபர் நபர்களுக்கும் லஞ்ச் பாக்ஸ் ரெசிபி மிகவும் முக்கியமானதாகவும் உதவியாகவும் இருக்கும். அதுவும் காலை வேலைகளில் அவசரம் அவசரமாக தயாராகும் பொழுது சமையலுக்கு தனியாக நேரம் ஒதுக்க முடியாத நிலையிலும் சுவையானதாகவும் சத்து நிறைந்ததாகவும் சாப்பிட விரும்புபவர்களுக்கு இந்த ரெசிபி கைகொடுக்கும் வண்ணத்தில் அமைந்திருக்கும். வாங்க பத்தி நிமிடத்தில் மாங்காய் வைத்து பப்பு பூவா செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒரு குக்கரில் ஒரு கப் துவரம் பருப்பு சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்து மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் சேர்த்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும். மிதமான தீயில் மூன்று முதல் நான்கு விசில்கள் வரை வேக வைத்து எடுத்துக்கொள்ளலாம்.
குக்கரில் விசிறிகள் வந்ததும் அழுத்தம் குறைந்தபின் திறந்து பார்த்து படிப்பினை மீண்டும் ஒரு முறை நன்கு மசித்து கொடுத்துக் கொள்ளலாம். அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி சீரகம், இரண்டு காய்ந்த வத்தல், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
கடுகு நன்கு பொரிந்து பிறகு மாங்காய் ஊறுகாய் இரண்டு தேக்கரண்டி கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். ஊறுகாய் சேர்த்த பிறகு கைவிடாமல் நன்கு கிளறி கொடுக்க வேண்டும். அடுத்ததாக நாம் வேகவைத்து மசித்து வைத்திருக்கும் பருப்பை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.
பருப்பு சேர்த்த பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பருப்பு கொதித்து வரும் நேரத்தில் தேவையான அளவு உப்பு மற்றும் கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி கிளரி கொடுத்துக் கொள்ளலாம். இதனுடன் சூடான சாதத்தை கிளறினால் மாங்காய் பருப்பு பூவா தயார்.
இந்த ஒரு பருப்பில் தாராளமாக காரம், புளிப்பு என அனைத்து சுவைகளும் சம அளவில் கலந்து இருக்கும்.