மாம்பழம் வைத்து புதுமையாக ஒரு ரெசிபி சாப்பிட ஆசையா? வாங்க ஐந்தே நிமிடத்தில் மாம்பழ பச்சடி!

வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்தமான பழங்களில் ஒன்று மாம்பழம். கோடை காலங்களில் மட்டுமே கிடைக்கும் இந்த மாம்பழத்தின் சீசன் தற்பொழுது தொடங்கி உள்ளது. இதை வைத்து விதவிதமான பல ரெசிபிகள் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம் வாங்க. அதற்கு ஐந்து நிமிடத்தில் மாம்பழம் வைத்து அருமையான பச்சடி ரெசிபி செய்வதற்கான விளக்கம் இதோ….

இந்த மாம்பழம் பச்சடி செய்வதற்கு நன்கு பழுத்த ஒரு மாம்பழத்தை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். தோள்களை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளலாம். மாம்பழத்தின் நடுவே இருக்கும் விதைப் பகுதியின் மேல் இருக்கும் சதை பத்துகளை நாம் எடுத்து விதையை நீக்கிவிடலாம்.

இப்படி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய மாம்பழத்தை ஒரு அகலமான கடாயில் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இந்த மாம்பழம் மூன்று முதல் ஐந்து நிமிடத்தில் நன்கு வெந்துவிடும். மாம்பழத்தை கடாயில் வேகவைக்கும் பொழுது அரை தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி வெல்லம் சேர்த்து வேக வைக்க வேண்டும்.

மாம்பழம் வெந்து கொண்டிருக்கும் சமயத்தில் இதற்கு தேவையான மசாலாக்களை தயார் செய்து கொள்ளலாம். அதற்காக ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் துருவிய தேங்காய், அரை தேக்கரண்டி கடுகு, ஒரு காய்ந்த வத்தல், காரத்திற்கு ஏற்ப இரண்டு முதல் மூன்று பச்சை மிளகாய், ஒரு தேக்கரண்டி கெட்டி தயிர் சேர்த்து தண்ணீர் கலந்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்.

மூன்று நிமிடம் கழித்து மாம்பழம் நன்கு வந்ததும் நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் கலவைகளில் அதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது இந்த பச்சடி மிகவும் கெட்டியாகவும் இருக்கக்கூடாது தண்ணியாகவும் இருக்கக்கூடாது. அதற்கு ஏற்றார் போல் தண்ணீர் சேர்த்து க் கொள்ளவும்.

தேங்காய் சேர்த்த பின் கடாயில் மாங்காய் பச்சடி ஒரு கொதி வரும் வரை காத்திருக்க வேண்டும். அதிகமாக கொதிக்க விடக்கூடாது. ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடலாம். இப்பொழுது இந்த பச்சடிக்கு அருமையான ஒரு தாளிப்பு செய்து கொள்ள வேண்டும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் கிடைக்கும் ஸ்பெஷல் கிழங்கு பொட்டலம்! ரெசிபி இதோ….

அதற்காக ஒரு சிறிய கடாயில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடு படுத்த வேண்டும். அதனுடன் அரை தேக்கரண்டி கடுகு, ஒரு காய்ந்த வத்தல், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தலித்துக் கொள்ளலாம். இறுதியாக அடுப்பை அணைத்துவிட்டு அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த கலவையை மாம்பழ பச்சடியுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளலாம். இறுதியாக ஒரு முறை உப்பு சரி பார்த்து சூடான சாதத்துடன் பரிமாறும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.
ஐந்தே நிமிடத்தில் செய்யக்கூடிய இந்த பச்சடி ஒரு முறை வீட்டில் சமைத்து பார்த்தால் அதன் பின் பலரின் விருப்பமான உணவாக மாறிவிடும்.