காலநிலைக்கு ஏற்றால் போல சிலவகையான காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகமாக கிடைத்து சுவை மிகுந்ததாக இருப்பது வழக்கமான ஒன்று. அதேபோல இந்த கோடை விடுமுறையில் மாம்பழம் மற்றும் பலாப்பழம் அதிகமாக விளைச்சல் தரும். அதிலும் மாம்பழம் யாருக்கு தான் பிடிக்காது. இந்த முறை மாம்பழம் வைத்து ஒரு முறையாவது தித்திப்பான அல்வா செய்து சாப்பிடலாம் வாங்க… மாம்பழ அல்வா செய்வதற்கான விளக்கம் இதோ..
முதலில் இரண்டு பழுத்த மாம்பழங்களை தேர்வு செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதை நன்கு கழுவி சுத்தம் செய்து தோல் பகுதிகளை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் விழுதுகளை மட்டும் தனியாக ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த மாம்பழ விழுதுகளை ஒரு முறை நன்கு அடுத்து கூழ் போல மாற்றிக் கொள்ளலாம்.
அடுத்ததாக ஒரு அடிகனமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து உருகியதும் நாம் அரைத்து வைத்திருக்கும் மாம்பழ விழுதுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். மிதமான தீயில் 10 நிமிடம் வதக்கிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக இரண்டு மாம்பழங்களுக்கு ஒன்றரை கப் அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும். மாம்பழத்தின் இனிப்பிற்கு ஏற்ப சர்க்கரையின் அளவு சற்று கூடுதலாக அல்லது குறைய மாற்றிக் கொள்ளலாம்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து சர்க்கரை கரைந்து வரும் வரை தொடர்ந்து கிளற வேண்டும். குறைந்தது பத்து நிமிடம் வரை சர்க்கரை கரைந்து நன்கு கெட்டிப் பதத்திற்கு வரும். அதன் பிறகு இரண்டு தேக்கரண்டி கான்பிளார் மாவை தண்ணீரில் கரைத்து அந்த கலவையை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆந்திரா மெஸ் ஸ்பெஷல் பருப்பு பொடி நம் வீட்டில் செய்வதற்கான ரெசிபி இதோ!
கடாயில் தொடர்ந்து கைவிடாமல் கிளற வேண்டும். அவ்வப்பொழுது ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறி கொள்ளலாம். மாம்பழ விழுதுகள் கெட்டி பதத்திற்கு வரும்பொழுது கொதிக்கும் வெந்நீரில் ஊற வைத்திருக்கும் குங்குமப்பூ சேர்த்து கலந்து கொள்ளலாம். இது அல்வாவிற்கு நல்ல நிறத்தை கொடுக்கும்.
இறுதியாக மீண்டும் ஒரு தேக்கரண்டி நெய், ஒரு தேக்கரண்டி சில்லி ஃபிளக்ஸ்,ஒரு தேக்கரண்டி பிஸ்தா பருப்பு சேர்த்து நன்கு கலந்து இறக்கினால் சுவையான மாம்பழ அல்வா தயார்.