காலை மற்றும் மாலை வேலைகளில் குழந்தைகளுக்கு கால்சியம், புரோட்டின் சத்து அதிகரிக்க வேண்டும் என தவறாமல் ஒரு டம்ளர் பால் கொடுப்பது. ஆனால் நாம் கொடுக்கும் பாலில் போதுமான அளவு கால்சியம் சத்து உள்ளது என்பது கேள்விக்குறிதான். இந்த முறை பாலில் உள்ள சத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக சத்து நிறைந்த மக்கனா மற்றும் சில பொருட்கள் வைத்து ஹெல்த்தியான மில்க் ரெசிபி செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒரு அகலமான கடாயில் ஒரு கப் மக்கனா சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக பாதிக்கப்பட்ட அளவிற்கு ஓட்ஸ் சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் வறுத்த இரண்டு பொருட்களையும் தனியாக ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளலாம்.
அடுத்ததாக அதே கடாயில் 50 கிராம் அளவுள்ள பாதாம் பருப்பு, 50 கிராம் அளவுள்ள முந்திரி பருப்பு, வாசனைக்காக ஏலக்காய் 3 சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பாதாம் மற்றும் முந்திரியை வறுக்கும் பொழுது அடுப்பை மிதமான தீயில் வைத்து மெதுவாக பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். இல்லை என்றால் வெளிப்பக்கம் எளிதில் பொன்னிறமாக மாறிவிடும் உள்பக்கம் சற்று பச்சை தன்மையுடனே இருக்கும்.
இப்பொழுது நாம் வறுத்த பாதாம், முந்திரி ஏலக்காய் தனியாக அதை தட்டிற்கு மாற்றிக் கொள்ளலாம். அடுத்து இரண்டு தேக்கரண்டி வேர்க்கடலை சேர்த்து நன்கு பருக்க வேண்டும். இறுதியாக ஒரு தேக்கரண்டி கசகசா சேர்த்து கடாயின் சூட்டில் நன்கு வறுத்துக்கொள்ள வேண்டும்.
இப்பொழுது நாம் வறுத்த அனைத்து பொருட்களையும் ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி நன்கு மையாக கொலை செய்து கொள்ள வேண்டும். இந்த பொருட்களை அரைக்கும் போது அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் தூள் நிறத்திற்காக மட்டுமே சேர்க்கப்படுகிறது என்பதால் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம்.
இப்பொழுது பாத்திரத்தில் நமக்கு தேவையான அளவு பாலை சேர்த்து சூடுபடுத்திக் கொள்ளலாம். பால் நன்கு கொதித்து வரும் நேரத்தில் இரண்டு தேக்கரண்டி நாம் தயார் செய்து வைத்திருக்கும் மக்கனா பவுடர், ஒரு தேக்கரண்டி நாட்டு சக்கரை சேர்த்து நன்கு கலந்து கொடுத்து ஒருமுறை கொதி வந்ததும் இறக்கி பரிமாறினால் சுவையான மற்றும் ஹெல்த்தியான பால் தயார்.
மேலும் நம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த மக்கனா ஹெல்த்தி பவுடர் இரண்டு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாமல் அதை சுவை மற்றும் மணத்துடன் அப்படியே இருக்கும்.