சமைக்க தெரியாதவர்கள் கூட எளிமையாக சமைக்கும் ஒரே ரெசிபி சிக்கன் 65 தான். சிக்கன் அதனுடன் சில மசாலா பொருட்கள் சேர்த்து எளிமையாக செய்து விட முடியும். எளிமையாக செய்வது மட்டுமின்றி சுவையினும் அருமையாக இருக்கும். இப்படி இருக்க எப்போதும் சிக்கன் வைத்து ஒரே 60 செய்யாமல் சற்று வித்தியாசமாக மகாராணி சிக்கன் செய்து சாப்பிட்டு பாருங்க. சுவையில் அசத்தலாக இருக்கும். இந்த மகாராணி சிக்கன் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க..
முதலில் அரை கிலோ சிக்கன் நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் ஐந்து பல் வெள்ளைப்பூண்டு, 3 பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பூண்டு பச்சை மிளகாய் விழுதுவை சிக்கனுடன் சேர்த்து கலந்து கொள்ளலாம்.
அடுத்ததாக ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி சீரகத்தூள், அரை தேக்கரண்டி தனியாத்தூள், அரை தேக்கரண்டி சோம்புத்தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதில் ஒரு முட்டையை நன்கு உடைத்து சேர்த்து கலந்து கொள்ளலாம்.
இறுதியாக இரண்டு தேக்கரண்டி கான்பிளவர் மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். நாம் சிக்கனோடு மசாலாவை நன்கு கலந்து பத்து முதல் 15 நிமிடம் அப்படியே வைத்து விட வேண்டும். அதன் பிறகு எண்ணையை மிதமாக சூடு படுத்தி கொண்டு பொன்னிறமாக பொறுத்து எடுத்துக் கொள்ளலாம்.
பொறித்த சிக்கன்களை தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொள்ளலாம். அடுத்ததாக இரண்டு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் லேசாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஐந்து காய்ந்த வத்தல், நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயம், இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
6 முதல் 7 மணி நேரம் ஆனாலும் கெட்டுப் போகாத ரயில்வே தேங்காய் சட்னி ரெசிபிகள்!
வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நாம் பொரித்து வைத்திருக்கும் சிக்கனை சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் அதை தேக்கரண்டி கறி மசாலா, தனி மிளகாய் தூள் அரை தேக்கரண்டி, சீரகத்தூள் அரை தேக்கரண்டி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். இறுதியாக அரை தேக்கரண்டி மிளகுத்தூள் சேர்த்து நன்கு பிரட்டி கொடுத்த இறக்கினால் சுவையான மகாராணி சிக்கன் தயார்.