மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் கோவில் தான் நினைவிற்கு வரும். மீனாட்சி அம்மன் கோவிலை தாண்டி அதை சுற்றி இருக்கும் கடை வீதிகளில் மிக ஃபேமஸாக கிடைக்கும் கிழக்கு பொட்டலம் சாப்பிடாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அசத்தலான சுவையில் பரம்பரியமான முறையில் இந்த கிழங்கு பொட்டலம் தினமும் தயாராகி விற்பனைக்கு வருகிறது. இந்த பொட்டலம் சாப்பிட நாம் மதுரை செல்ல வேண்டிய அவசியம் இல்லை அதை நம் வீட்டிலேயே எளிமையான முறையில் செய்வதற்கான அசத்தல் ரெசிபி இதோ…
ஒரு அகலமான இரும்பு கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய சிறிய துண்டு இஞ்சி, வெள்ளைப் பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
பச்சை மிளகாய் நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை கடாயில் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் வதக்க வேண்டும்.
அப்பொழுதுதான் மசாலாக்களின் பச்சை வாசனை சென்று கிழங்கு வாசமாக இருக்கும். அடுத்ததாக இரண்டு தேக்கரண்டி கடலைமாவை கடாயில் சேர்த்து எண்ணெயோடு நன்கு கலந்து வதக்க வேண்டும். எண்ணெய் பிரிந்து கடாயில் ஓரங்களில் வரும் நேரத்தில் நாம் வேகவைத்து மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்குகளை இதில் சேர்த்துக் கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஹோட்டல் ஸ்டைல் செஸ்வான் சிக்கன்… அட்டகாசமான ரெசிபி இதோ….
இந்த கலவையில் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. மிதமான தீயில் எண்ணெயோடு உருளைக்கிழங்கு மசாலா நன்கு சேரும் வரை கலந்து கொடுக்க வேண்டும். குறைந்தது ஐந்து நிமிடம் மிதமான தீயில் இந்த கலவையை வேக வைக்க வேண்டும்.
அதன் பின் அடுப்பை அணைத்து கைப்பிடி அளவு மல்லி இலைகளை பொடியாக நறுக்கி தூவி இறக்கினால் சுவையான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஸ்பெஷல் உருளைக்கிழங்கு பொட்டலம் தயார். மதுரையில் இந்த கிழங்கு பொட்டலத்தை மந்தார இலையில் வைத்து தருவதால் மேலும் சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும்.