குழந்தைகள் லஞ்ச் பாக்ஸுக்கு வித்தியாசமான இந்த புதினா சாதத்தை செய்து பாருங்கள்!

புதினா இதன் நறுமணமே புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும். புதினாவை சேர்த்து செய்யும் உணவுகள் அத்தனைக்கும் கூடுதல் சுவை கிடைக்கும். அதே போல் தான் இந்த புதினா சாதம் மற்ற வெரைட்டி உணவுகளை விட இந்த புதினா சாதம் வித்தியாசமான சுவையுடன் இருக்கும். மேலும் புத்துணர்ச்சி நிறைந்ததாக இருக்கும். இந்த புதினா சாதத்தை செய்வது மிக எளிமை. வாருங்கள் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

சுலபமா செய்யலாம் குழந்தைகள் லஞ்ச் பாக்ஸுக்கு சூப்பரான கொத்தமல்லி சாதம்!

புதினா சாதம் செய்வதற்கு முதலில் இரண்டு கப் அளவு பாஸ்மதி அரிசியை குழையாமல் வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். நல்ல பிரஷ்ஷான புதினாக்களை தண்ணீரில் அலசி அதில் இலைகளையும் மட்டும் ஆய்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு இரண்டு கப் அளவு வருமாறு புதினா இலைகளை பிய்த்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது ஆய்ந்த இந்த புதினா இலைகளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். இதனுடன் இரண்டு சிறிய துண்டு இஞ்சி, சிறிய நெல்லிக்காய் அளவு புளி மற்றும் இரண்டு பச்சை மிளகாய்களை சேர்த்து அதிக தண்ணீர் ஊற்றாமல் லேசாக தண்ணீர் தெளித்து இதனை விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

நவராத்திரி அன்று பிரசாதத்திற்கு கல்கண்டு வடை இப்படி முயற்சி செய்து பாருங்கள்!

ஒரு கடாயில் ஒரு மேஜை கரண்டி அளவு என்னை சேர்த்து என்னை சூடானதும் அதில் ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, இரண்டு வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் உங்களுக்கு விருப்பமான வேர்க்கடலை அல்லது முந்திரிப் பருப்பு ஏதாவது ஒன்றை சேர்த்துக் கொள்ளலாம். பிறகு இதனுடன் நாம் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நாம் வடித்து வைத்திருக்கும் சாதத்தை சேர்க்கவும். சாதம் உடைந்து விடாமல் மெதுவாக இதனை கிளறி விடவும். சாதம் முழுவதும் மசாலாக்கள் படுமாறு கிளறிய பிறகு இறக்கி விடலாம்.

அவ்வளவுதான் சுவையான புதினா சாதம் தயார்!