வயிறு உப்பசம், அஜீரண கோளாரா… வாங்க வீட்டிலேயே எலுமிச்சை ரசம் செய்யலாம்!

சில நேரங்களில் எண்ணெய் பலகாரங்கள், அதிகப்படியான அசைவ உணவு, காலம் தவறிய சாப்பாடு, காரமான மசாலா கலந்த உணவு இவற்றின் காரணமாக நம் உடலில் அஜீரண கோளாறு, வயிறு உப்பசம், நெஞ்சு எரிச்சல் என பல கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதை சரி செய்ய வீட்டிலேயே எலுமிச்சை ரசம் வைத்து சாப்பிடலாம் வாங்க…. எலுமிச்சை ரசம் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ..

முதலில் ஒரு உரலில் 7 பல் வெள்ளை பூண்டு, , ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு சிறிய துண்டு இஞ்சி, காரத்திற்கு ஏற்ப இரண்டு அல்லது மூன்று பச்சை மிளகாய் சேர்த்து நன்குடித்துக் கொள்ள வேண்டும். உரல் இல்லாத பட்சத்தில் மிக்ஸியில் இதை சேர்த்து பரபரவென அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மையாக அரைக்க வேண்டிய அவசியம் இல்லை.

ரசம் செய்வதற்கு இரண்டு பழுத்த தக்காளிகள் தேவை. நன்கு பழுத்த தக்காளியை ஒரு அகலமான பாத்திரத்தில் கையால் பிசைந்து கொள்ள வேண்டும். அதனுடன் நாம் இடித்து வைத்திருக்கும் மிளகு சீரகத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நாள்பட்ட சளியை நொடியில் போக்கும் நாட்டுக்கோழி சூப்!

அடுத்ததாக கைபிடி அளவு பொடியாக நறுக்கிய கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்க்க வேண்டும். அகலமான பாத்திரத்தில் தற்பொழுது தேவையான அளவு தண்ணீர், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

இறுதியாக இரண்டு எலுமிச்சை பழத்தை பிழிந்து பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளலாம். நன்கு கலந்து கொடுத்து இந்த கலவையை ஒரு கொதி வரும் வரை காத்திருக்க வேண்டும். தற்பொழுது ரசம் தயாராக உள்ளது. இதற்கு மற்றொரு சிறிய கடாயில் எண்ணெய் கடுகு கருவேப்பிலை தாளித்து சேர்த்தால் சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும். இப்பொழுது சுவையான எலுமிச்சை ரசம் தயார்.

Exit mobile version