கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் மாதத்தின் ஆறாம் தேதி கொண்டாட இருக்கிறது. கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு பூஜை செய்து அவருக்குப் பிடித்தமான உணவு பண்டங்களை படைத்து கிருஷ்ணரை வழிபடுவர். கிருஷ்ணருக்கு பலவிதமான உணவுப் பொருட்கள், இனிப்பு வகைகள் படைக்கப் படும். அதில் முக்கியமான ஒரு இனிப்பு தான் லட்டு. இந்த லட்டு செய்வது மிக எளிமையான ஒன்று. அனைவருக்கும் பிடித்த இனிப்பு வகையில் கட்டாயம் லட்டு இடம் பிடித்திருக்கும். இந்த லட்டினை எப்படி வீட்டில் சுவையாக செய்யலாம் என்பதை பார்ப்போம்.
வாயில் வைத்ததும் கரையும் சூப்பரான நெய் ஒழுகும் மைசூர் பாகு!!
லட்டு செய்வதற்கு இரண்டு கப் கடலை மாவு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கடலை மாவுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு அரிசிமாவினை சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் ஒரு சிட்டிகை அளவிற்கு சோடா மாவு சேர்த்து விரும்பிய நிறத்தில் கேசரி பவுடர் சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும். இந்த மாவில் தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது அடுப்பில் கனமான பாத்திரம் ஒன்றை வைத்து அதில் மூன்று கப் அளவு சீனியை சேர்க்கவும். ஒன்றரை டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து பாகு செய்யவும். இப்பொழுது மற்றொரு அடுப்பில் தேவையான அளவு எண்ணெய் காய வைத்து கரைத்து வைத்திருக்கும் மாவினை ஒரு கிண்ணம் எடுத்து அதை பூந்தி கரண்டி மூலம் எண்ணெயில் ஊற்றி பூந்தி தேய்த்துக் கொள்ளவும்.
பூந்தி நன்கு வெந்ததும் ஓரளவு சிவக்க விட்டு எடுக்கவும் இதே போல் எல்லா மாவையும் பூந்தி செய்து கொள்ளவும். ஏற்கனவே அடுப்பில் தயார் செய்த பாகு இளம் கம்பி பதம் வரும் பொழுது அதனை இறக்கி விடலாம். அந்த பாகில் தயார் செய்து வைத்திருக்கும் பூந்தியை கொட்டி கிளறி விடவும். ஒரு தாளிக்கும் கரண்டியில் நெய் சேர்த்து அதில் முந்திரி, திராட்சை ஆகியவற்றை வறுத்து சேர்க்கவும். சிறிதளவு ஜாதிக்காய் தூள், ஏலக்காய் தூள், ஐந்து கிராம்பு, கொஞ்சமாக டைமண்ட் கல்கண்டு ஆகியவற்றை சேர்த்து கிளறி அரை மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும். அரை மணி நேரத்திற்கு பின்பு உருண்டைகளாக உருண்டை பிடிக்கவும்.
இவ்வளவு டேஸ்டியான கோதுமை அல்வாவா… இதை செஞ்சு பாருங்க இனி கடைகளில் அல்வா வாங்க மாட்டீங்க…!
அவ்வளவுதான் சுவையான லட்டு தயாராகிவிடும்… இதனை கிருஷ்ணருக்கு படைத்து கிருஷ்ண ஜெயந்தியை சிறப்பாக கொண்டாடுங்கள்!