என்ன குழம்பு வைப்பது என குழப்பத்தில் இருப்பவர்களுக்கு அசத்தல் குழம்பு ரெசிபி!

வீடுகளில் சில நேரங்களில் என்ன சமையல் செய்வது? அனைவருக்கும் பிடித்த வகையில் என்ன குழம்பு வைப்பது என்பது பல நேரங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் கேள்வியாக இருந்து வருகிறது. இந்த முறை சமைக்கத் தெரியாதவர்களும் கூட எளிதில் சமைக்கும் விதமாக சுவையான மற்றும் நொடியும் தயாராகும் குழம்பு ரெசிபி இதோ…

முதலில் ஒரு அகலமான கடாயில் மூன்று தேக்கரண்டி பச்சைப்பயிறு சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த பச்சை பயிரை பச்சை சிறிது நேரம் ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒன்று இரண்டாக பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக மைய்யாக பொடி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

இப்பொழுது இந்த பொடியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி அல்லது ஒரு குழி கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து பத்து முதல் 15 சின்ன வெங்காயம், அரை தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம், ஒரு சிறிய துண்டு இஞ்சி, மூன்று பல் வெள்ளை பூண்டு, , ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் நன்கு பழுத்த மூன்று தக்காளி பழங்களை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். தக்காளி நன்கு மசிந்து வரும் நேரத்தில் ஒரு கப் தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளலாம். தேங்காய் பொன்னிறமாக வதங்கி வாசம் வரும் நேரத்தில் மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.

இதற்காக ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி தனியா தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது மசாலா தயாராக மாறி உள்ளது. இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

கேரளா ஸ்பெஷல் சிவக்க சிவக்க காரம்சற்று குறைவான முட்டை சம்பல்! ரெசிபி இதோ…

அடுத்ததாக ஒரு குழம்பு பாத்திரத்தில் மூன்று அல்லது நான்கு உருளைக்கிழங்குகளை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தேவையான அளவு தண்ணீர் கலந்து வேக வைக்க வேண்டும். உருளைக்கிழங்கு பாதியாக வெந்து வரும் நேரத்தில் ஊற வைத்திருக்கும் பச்சை பயிறு நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா சேர்த்துக் கொள்ளலாம்.

இதனுடன் தேவையான அளவு தண்ணீர் கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக உப்பு ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளலாம். மிதமான தீயில் இந்த குழம்புவை 10 முதல் 15 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். இறுதியாக தாளித்து இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு குழம்பு தயார். இதில் பச்சை பயிறு சேர்த்து சமைப்பதால் சுவை கூடுதலாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.

Exit mobile version