அடுப்பே இல்லாமல் ராஜஸ்தானி ஸ்டைல் கொய்யாப்பழம் சட்னி!

தினம் தினம் ஒரே மாதிரி சாப்பிடும் இட்லி, தோசை மற்றும் சப்பாத்திக்கு புதுவிதமான சட்னிகள் செய்து அசத்தும் பொழுது சலிக்காமலும் சற்று கூடுதலாக சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படும். அதற்காக இந்த முறை புதுவிதமான சட்னி செய்ய விரும்புபவர்களுக்கு பிடித்தமான வகையில் கொய்யாப்பழ சட்னி. அடுப்பே இல்லாமல் வதக்காமல் எந்தவித வேலையும் இல்லாமல் எளிமையான முறையில் காரசாரமான கொய்யாப்பழ சட்னி செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் காஷ்மீரி மிளகாய் ஒரு ஐந்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைக்கும் போது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.

காஷ்மீர் மிளகாய் பாதியாக அரை பட்டதும் கைப்பிடி அளவு சுத்தம் செய்த கொத்தமல்லி இலைகள், நன்கு பழுத்த ஒரு கொய்யாப்பழம் சேர்த்து கொள்ளலாம். இதனுடன் அரை தேக்கரண்டி நாட்டுச்சக்கரை அல்லது வெல்லம் சேர்த்து மீண்டும் அரைத்துக் கொள்ள வேண்டும்.

ரவை வைத்து இன்ஸ்டன்டான பட்டன் இட்லி! கேட்கும் போதே சாப்பிட ஆசை வருதா… ரெசிபி இதோ!

இப்பொழுது உப்பு சரிபார்த்து ஒரு பாத்திரத்தில் மாற்றினால் சுவையான கொய்யாப்பழம் சட்னி தயார். சாப்பிடுவதற்கு நல்ல காரசாரமான கொய்யாப்பழ சுவையில் அருமையான சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமல்லாமல் சாதத்தில் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும். ஒரு முறை தேங்காய் சட்னி தக்காளி சட்னி என வழக்கமான சட்னிகளை விட இந்த சட்னி செய்து பார்த்து குழந்தைகளை மகிழ்விக்கலாம்.

Exit mobile version