இட்லி மாவு இல்லாத சமயங்களில் இன்ஸ்டன்ட் ஆக சமைக்க வேண்டும் என நினைப்பவர்கள் ரவை வைத்து முதலில் உப்புமா தயார் செய்வது வழக்கமான ஒன்று.. ஆனால் இந்த உப்புமா வீட்டில் உள்ள குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவது இல்லை. இந்த நேரத்தில் ரவை வைத்து அருமையான பட்டன் இட்லி செய்து கொடுத்துப் பாருங்கள். இந்த சுவையில் மயங்கி மீண்டும் மீண்டும் ரவை பட்டன் இட்லி வேண்டும் என அடம் பிடிக்கும் அளவிற்கு சிறப்பாக இருக்கும். வாங்க இன்ஸ்டன்ட் ரவை பட்டன் இட்லி செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒரு கப் அவல் எடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் ரவை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு கப் ரவைக்கு கால் கப் அளவு தயிர் என்பது அளவு.
அதன்படி கால் கப் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். தயிர் மற்றும் ரவை கலந்து பிறகு ஐந்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். அடுத்ததாக நாம் முதலில் ஊறவைத்த அவல் உடன் ரவையுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை கைகளைக் கொண்டு நன்கு பிசைந்து எடுத்துக் கொள்ளலாம். அடுத்ததாக இதனுடன் ஒரு தேக்கரண்டி சில்லி ஃபிளக்ஸ், கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது மாவு தயாராக உள்ளது இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மினி இட்லி செய்யும் தட்டில் அடுக்கிக் கொள்ள வேண்டும். இந்த இட்லியை குறைந்தது ஐந்து நிமிடம் நன்கு வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு மற்றும் அரை தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி எள்ளு சேர்த்து தாளித்து கொள்ளலாம்.
முட்டை தோசைக்கு பதிலாக சிதம்பரம் ஸ்பெஷல் முட்டை சட்னி செய்யலாம் வாங்க!
அடுத்ததாக நாம் வேக வைத்திருக்கும் பட்டன் இட்லியை சேர்த்து ஒரு முறை நன்கு கிளறி கொள்ள வேண்டும். இப்பொழுது சுவையான ரவை பட்டன் இட்லி தயார். இதற்கு தேங்காய் சட்னி அல்லது காரச்சட்னி வைத்து சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும்.