முட்டை வைத்து பலவிதமான ரெசிபிகள் செய்தாலும் அதில் முதலில் இருப்பது முட்டை தோசை தான். இந்த முறை முட்டை வைத்து எளிமையாக செய்யும் தோசைக்கு அருமையான சட்னி செய்யலாம் வாங்க. அதுவும் சிதம்பரம் ஸ்பெஷல் முட்டை சட்னி செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு மற்றும் அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அடுத்ததாக கீறிய ஒரு பச்சை மிளகாய் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளலாம்.
பச்சை மிளகாய் பாதியாக வதங்கிய பிறகு பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கிய பிறகு பொடியாக நறுக்கிய மூன்று தக்காளிப்பழம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். தக்காளி பழம் வதங்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வெங்காய மற்றும் தக்காளி நன்கு வதங்கிய பிறகு ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை அடக்கிக் கொள்ளலாம். அடுத்ததாக மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.
அதற்காக ஒரு தேக்கரண்டி குழம்பு மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். மசாலாவின் பச்சை வாசனை சென்றவுடன் முட்டைகளை உடைத்து சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரே ஒரு கத்திரிக்காய் போதும்… 15 நிமிடத்தில் கத்திரிக்காய் கொத்சு தயார்!
நமக்கு தேவையான அளவு முட்டைகளை உடைத்து சேர்த்து மெதுவாக ஒரே கோணத்தில் கிளற வேண்டும். இறுதியாக உப்பு சரிபார்த்து கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான சிதம்பரம் ஸ்டைல் முட்டை சட்னி தயார்.