உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு சுவையான கொள்ளு கடையல்! மூன்று வேலையும் இது ஒன்றே போதும்….

உடல் எடை குறைத்து கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்பது இன்றைய தலைமுறையினரின் விருப்பமாக உள்ளது. ஆண், பெண் என பாராமல் அனைவரும் தன் உடல் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். உடல் மெலிந்து நோயின்றி வாழ விரும்புபவர்களுக்கு இந்த கொள்ளு மிகவும் உதவியாக இருந்து வருகிறது. இந்த முறை கொள்ளு வைத்து அருமையான கடையில் ரெசிபி செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…

முதலில் ஒரு அகலமான கடாயில் ஒரு கப் கொள்ளு சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை மிதமான தீயில் நன்கு வறுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் வறுத்துக் கொள்ளுவை சிறிது நேரம் ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒன்று இரண்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக அதே கடாயில் ஒரு தேக்கரண்டி தனியா, ஒரு தேக்கரண்டி சீரகம், காரத்திற்கு ஏற்ப காய்ந்த வத்தல் ஐந்து, அரை கப் தேங்காய் துருவல் சேர்த்து நல்ல வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ளலாம். இப்பொழுது நாம் வருத்த பொருட்களையும் கொள்ளுடன் சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைத்து விழுதுகளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

மீண்டும் அதே கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, அரை தேக்கரண்டி சீரகம், கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அதே கடாயில் 5 பல் வெள்ளை பூண்டு, 20 சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கும் நேரத்தில் இரண்டு காய்ந்த வத்தல் சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் கொள்ளு விழுதுவை சேர்த்துக் கொள்ளலாம்.

வெங்காயம், தக்காளி என எதுவும் சேர்க்காமல் ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத துவையல்! அதிரடி ரெசிபி இதோ…

இதனுடன் தாராளமாக தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் எலுமிச்சை பழ அளவு ஊறவைத்த புளி கரைசல், ஒரு தேக்கரண்டி நாட்டுச்சக்கரை, ஒரு தேக்கரண்டி பெருங்காயத்தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து மூடி போட்டு கொதிக்க விட வேண்டும்.

குறைந்தது 10 முதல் 15 நிமிடங்கள் மிதமான தீயில் நன்கு கொதித்து வரவேண்டும். இப்பொழுது அருமையான கொள்ளு கடையில் தயார். இது சூடான சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை என அனைத்திற்கும் கச்சிதமான பொருத்தமாக இருக்கும்.