அசத்தலான சமையலுக்கு உதவும் எளிமையான சமையல் குறிப்புகள் இதோ….

ஹோட்டல் போல சுவையாகவும் பாட்டியின் கைப் பக்குவத்தை போல ஆரோக்கியமாகவும் சமைக்க வேண்டும் என பலருக்கு ஆசை இருக்கும். ஆனால் சமைக்கும் பொழுது சில தடுமாற்றத்தின் காரணமாக சுவை மற்றும் மனம் சரிவர கிடைப்பது இல்லை. இந்த நேரங்களில் எளிமையான சமையல் டிப்ஸ்களை கையில் வைத்து சமைக்கும் போது அருமையான சமையல் செய்து முடிக்க முடியும். இந்த முறை அசத்தலான சமையலுக்கு உதவும் எளிமையான குறிப்புகள் இதோ…

ரவா தோசை செய்யும் பொழுது மாவு தோசை கல்லில் சில நேரங்களில் அப்படியே பிடித்து விடும். அதை தவிர்க்கும் விதமாக ரவா தோசைக்கு மாவு தயார் செய்யும் பொழுது அதனுடன் ஒரு தேக்கரண்டி கடலை மாவு செய்வது கலந்து அதன் பின்பு தோசை சுட்டால் இந்த பிரச்சனை வராது.

சின்ன வெங்காயத்தை தோல் உரிக்க சிரமமாக இருக்கும் பொழுது வெங்காயத்தை குறைந்தது ஐந்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து அதன் பிறகு தோல் உரித்தால் எளிமையாக வந்துவிடும். மேலும் கண் எரிச்சலும் இருக்காது.

வெண்டைக்காய் பொரியல் செய்யும் பொழுது வழவழப்பு தன்மை வராமல் இருப்பதற்காக வெண்டைக்காயை எண்ணெயில் வதக்கும் பொழுது ஒரு தேக்கரண்டி கெட்டி தயிர் சேர்த்து வதக்கினால் வெண்டைக்காய் நல்ல முறுமுறுப்பாக கிடைக்கும்.

வீட்டில் பக்கோடா விற்கு மாவு தயார் செய்யும் பொழுது இதனுடன் வெங்காயம் மற்றும் இஞ்சி அரைத்த விழுதுகளை சேர்த்து பக்கோடா மாவு தயார் செய்து பக்கோடா செய்யும் பொழுது முறுமுறுப்பாக சுவையாக இருக்கும்.

நாம் செய்த மீன் குழம்பிற்கு கூடுதல் ருசி கொடுக்க வேண்டும் என நினைத்தால் மீன் குழம்பு செய்து அடுப்பில் இருந்து இறக்கும்பொழுது இரண்டு அல்லது மூன்று சின்ன வெங்காயத்தை நன்கு கழுவி சுத்தம் செய்து தோளோடு இடித்து குழம்பில் சேர்த்து கலந்து இறக்கினால் வாசனையாக இருக்கும்.

மீனவர்களின் பீட்சா என செல்லமாக அழைக்கப்படும் அட்லப்பம்! ரெசிபி இதோ…

சேனைக்கிழங்கு மற்றும் சேப்பங்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை சாப்பிடும் பொழுது தொண்டையில் அரிப்பு ஏற்படும். அதை தடுப்பதற்காக இந்த கிழங்கு வகைகளை சமைக்கும் பொழுது அரிசி களைந்த இரண்டாவது தண்ணீரில் வேக வைத்து அதன் பின் சமைத்தால் அரிப்பு பிரச்சனை இருக்காது.

வீட்டில் உளுந்து வடை செய்வதற்கு மாவு ஊற வைக்கும் பொழுது ஒரு கப் உளுந்து இருக்கு ஒரு தேக்கரண்டி துவரம் பருப்பு சேர்த்து ஊற வைத்து அதன் பின் மாவு அரைத்து வடை தயார் செய்யும் பொழுது ருசியாகவும் எண்ணெய் அதிகம் குடிக்காமலும் இருக்கும்.

Exit mobile version