வாசனைக்காக கைப்பிடி அளவு சேர்க்கும் கொத்தமல்லி கீரை வைத்து அருமையான கீரை கடையல்!

பொதுவாக அனைத்து விதமான சமையலின் போதும் இறுதியில் வாசனைக்காக கொத்தமல்லி இலை சேர்ப்பது வழக்கமான ஒன்று. ஆனால் கொத்தமல்லி . இலையில் உடலுக்கு தேவையான பலவிதமான நன்மைகள் உள்ளது. பித்தம், வாந்தி, அஜீரண கோளாறு போன்றவற்றிற்கு கொத்தமல்லி இலை அருமருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறை கீரை கடையலைப் போல கொத்தமல்லி கீரை வைத்து அருமையான கீரை கடையல் செய்வதற்கான ரெசிபியில் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அடி கனமான கடாயை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய 10 பல் வெள்ளைப் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பூண்டு நிறம் மாறியதும் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழங்களை சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். தக்காளி நன்கு வெந்து மசிந்து வரும் நேரத்தில் மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.

இதற்காக ஒரு தேக்கரண்டி தனியாத்தூள், ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை செல்லும்வரை சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ள வேண்டும். அடுத்ததாக கடாயில் இரண்டு கப் மல்லி இலைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த ஐந்து பொருள் போதும்..15 நிமிடத்தில் அருமையான புட்டிங் தயார்!

மல்லி இலை சேர்த்த பிறகு அதிக நேரம் வதக்க வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தது ஒரு நிமிடம் வரை வதக்கினால் போதுமானது அதன் பிறகு நாம் வதக்கி அனைத்து பொருட்களையும் கீரை கடையும் பாத்திரத்திற்கு மாற்றிவிடலாம். இதனுடன் 150 கிராம் வேகவைத்த துவரம் பருப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் ஒரு தேக்கரண்டி உப்பு, கைப்பிடி அளவு பச்சை கொத்தமல்லி இலை, தேவையான அளவு தண்ணீர் கலந்து கடைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி, அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, அரை தேக்கரண்டி சீரகம், இரண்டு காய்ந்த வத்தல், 5 சின்ன வெங்காயம், அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து கீரை கடைகளில் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது சுவையான கொத்தமல்லி இலை கீரை கடைசல் தயார்.