செஃப் வெங்கடேஷ் பட் அவர்களின் விருப்பமான ஸ்பெஷல் மங்களூர் தோவா! ஒருமுறை ட்ரை பண்ணலாம் வாங்க…

செஃப் வெங்கடேஷ் பட் அவர்களின் ரெசிபி சமைப்பவர்களுக்கு உதவியாகவும் சமையலே தெரியாதவர்களுக்கு வரமாகவும் அமைந்திருக்கும். அவர் ரெசிபியை பயன்படுத்தி சமைக்கும் ஒவ்வொரு சமையலும் பெரிய 5 ஸ்டார் ஹோட்டலின் சுவையை கொடுக்கும். சமையலில் நிபுணராக இருக்கும் செஃப் வெங்கடேஷ் பட் அவர்களின் விருப்பமான மங்களூர் தோவா செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ….

முதலில் கால் கப் பாசிப்பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து ஒரு குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் இரண்டாக கீறிய ஒரு பச்சை மிளகாய், ஒரு சிறிய துண்டு இஞ்சி, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இஞ்சி சேர்க்கும் பொழுது நன்கு இடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தேவையான அளவு தண்ணீருடன், ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் சேர்த்து குக்கரை மூடி விட வேண்டும். மூன்று விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்துக்கொள்ளலாம்..

மூன்று விசில்கள் வந்து குக்கரின் அழுத்தம் குறைந்ததும் பருப்பு நன்கு வெந்து இருக்கும். அதை மேலும் வசித்து கொள்ளலாம். இப்பொழுது இரண்டு கப் தண்ணீர், அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக இதற்கு தாளிப்பு தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ஒரு சிறிய கடாயில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடுபடுத்த வேண்டும்.அடுத்ததாக ஒரு தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, அரை தேக்கரண்டி கடலை பருப்பு, அரை தேக்கரண்டி சீரகம்,கால் தேக்கரண்டி வெந்தயம், ஒரு காய்ந்த வத்தல், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

இந்த தாளிச கலவையை மசித்து வைத்திருக்கும் பருப்புடன் சேர்த்துக் கொள்ளலாம். அடுத்ததாக இதில் கூற வைத்திருக்கும் புளி கரைச்சல் அரை கப் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

கொய்யாப்பழம் வைத்து காரக்குழம்பு செய்யலாமா… வாங்க கனி அக்கா ஸ்பெஷல் கொய்யாப்பழம் காரக்குழம்பு ரெசிபி இதோ…

புளி சேர்க்க விருப்பமில்லாதவர்கள் தக்காளி பழம் சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக அரை தேக்கரண்டி அச்சு வெல்லம் கைப்பிடி அளவு கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான மங்களூர் தோவா தயார். இதை இட்லி தோசை மற்றும் சப்பாத்திக்கு சைடிஷ் ஆக வைத்து சாப்பிடலாம்.

பத்து நிமிடத்தில் எளிமையாக இந்த ரெசிபியை செய்து முடித்து விடலாம். இதை சப்பாத்திக்கு வைத்து சாப்பிடும் பொழுது சைடிஷ் ஆக மட்டுமல்லாமல் மேலே ஊற்றி அதிகமாக சேர்த்து ஊற வைக்கும் சாப்பிடலாம்.

Exit mobile version