லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக கத்திரிக்காய் வறுவல் மசாலா சாதம்! ரெசிபி இதோ…

லஞ்ச் பாக்ஸ்க்கு விதவிதமான கலவை சாதங்கள் செய்து குழந்தைகளை அசத்தும் தாய்மார்களுக்கு இந்த ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும். கத்திரிக்காய் பிடிக்காத குழந்தைகள் கூட ஒரு முறை இதை சாப்பிட்ட பிறகு இதன் சுவையின் மீண்டும் வேண்டும் என கேட்கும் அளவிற்கு அமிர்தமாக இருக்கும். இந்த கத்திரிக்காய் வறுவல் மசாலா சாதம் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…

முதலில் ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் 10 சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் நான்கு பல் வெள்ளை பூண்டு தட்டி சேர்த்துக் கொள்ளலாம்.

நாம் சேர்த்த வெங்காயம் மற்றும் பூண்டு பொன்னிறமாக மாறியதும் 300 கிராம் அளவுள்ள பிஞ்சு கத்திரிக்காய் நீளவாக்கில் நறுக்கி கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெயோடு சேர்த்து கத்திரிக்காய்களை நன்கு வதக்க வேண்டும். கத்திரிக்காய் சற்று வதங்கி நிறம் மாறிய பிறகு மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக இதில் ஒன்றரை தேக்கரண்டி குழம்பு மிளகாய் தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை நன்கு வதக்கி கொள்ள வேண்டும். கத்திரிக்காய் பொதுவாக 5 நிமிடத்தில் எண்ணெயில் வதங்கி விடும் இப்பொழுது மசாலாவுடன் சேர்த்து நன்கு வதங்கி பக்குவத்திற்கு தயாராகிவிடும்.

முடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வாக அமையும் கருவேப்பிலை வைத்து அருமையான குழம்பு ரெசிபி!

இப்பொழுது சுவையான கத்திரிக்காய் வறுவல் தயார். இதை நாம் கலவை சாதங்கள் அதாவது சாம்பார் சாதம் தயிர் சாதம் ரசம் சாதம் இவற்றுடன் வைத்து சாப்பிடலாம். இந்த முறை இந்த கத்திரிக்காய் வறுவலுடன் ஆரம்பித்த சாதம் ஒரு கப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து கொடுத்து இறக்கினால் சுவையான கத்திரிக்காய் வறுவல் மசாலா சாதம் தயார்.