இது ஒன்று போதும்… இட்லி, தோசை,சப்பாத்தி, கலவை சாதம் என அனைத்திற்கும் அம்சமான பொருத்தமாக இருக்கும்… கத்திரிக்காய் ஊறுகாய் செய்வதற்கான ரெசிபி!

மிகக்குறைவான நேரத்தில் எளிமையான முறையில் சமைக்கக்கூடிய காய்கறிகளில் ஒன்று கத்திரிக்காய். இந்த கத்திரிக்காய் வைத்து எந்த ரெசிபி செய்தாலும் நொடியில் தயாராகி விடும். அப்படி கத்திரிக்காய் வைத்து நாம் பல ரெசிபிகள் தொக்கு, கிரேவி என செய்திருந்தாலும் இந்த முறை பிஞ்சு கத்திரிக்காயை பயன்படுத்தி ஊறுகாய் செய்வது சற்று புதுமையாக இருக்கலாம். இந்த கத்திரிக்காய் ஊறுகாய் இட்லி, தோசை, சப்பாத்தி, ஆப்பம், இடியாப்பம், சாம்பார் சாதம், தயிர் சாதம், கீரை சாதம் என அனைத்திற்கும் அட்டகாசமான பொருத்தமாக இருக்கும். விதவிதமான ஊறுகாய் சாப்பிட்ட பலருக்கு இந்த கத்திரிக்காய் ஊறுகாய் சற்று புது விதமான அனுபவத்தையே கொடுக்கும். வாங்க கத்திரிக்காய் ஊறுகாய் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…

முதலில் கத்திரிக்காய் ஊறுகாய் செய்வதற்கு தேவையான மசாலா பொருட்களை தயார் செய்து கொள்ளலாம். இதற்கு ஒரு அடி கனமான கடாய் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் இரண்டு தேக்கரண்டி முழு தனியா, அரை தேக்கரண்டி வெந்தயம், ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு சிறிய துண்டு கட்டி பெருங்காயம், காரத்திற்கு ஏற்ப ஐந்து முதல் 8 காய்ந்த வத்தல் சேர்த்து நன்கு வறுத்து கொள்ள வேண்டும். வறுத்த இந்த பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து கொள்ள. செய்து கொள்ளலாம்.

அடுத்ததாக அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி தாராளமாக நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். இதில் 200 முதல் 300 கிராம் அளவுள்ள பிஞ்சு கத்திரிக்காய் நான்காக கீரி எண்ணெயோடு நன்கு வதக்க வேண்டும்.

வதக்கிய கத்திரிக்காய்களை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளலாம். அடுத்ததாக கடாயில் மீதம் இருக்கும் அதே எண்ணெயோடு கூடுதலாக ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் அரை தேக்கரண்டி வெந்தயம், ஒரு தேக்கரண்டி கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக 10 பல் பொடியாக நறுக்கிய வெள்ளைப் பூண்டு, ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். இதில் நாம் எண்ணெயில் வதக்கி வைத்திருக்கும் கத்திரிக்காய்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கத்திரிக்காய் மீண்டும் வதங்கும் நேரத்தில் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது அரை தேக்கரண்டி கல்லுப்பு சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். இதில் இப்பொழுது மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.

இதற்காக அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், வறுத்து அரைத்து வைத்திருக்கும் மசாலாத்தூள் இரண்டு தேக்கரண்டி சேர்த்து நன்கு கிளற வேண்டும். மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை மிதமான தீயில் அடக்கிக் கொள்ளலாம். அடுத்ததாக இதில் எலுமிச்சை பழ அளவு ஊறவைத்த கெட்டியான புளி கரைசல் செய்து கொள்ள வேண்டும்.

நான்கு முட்டை மட்டும் இருந்தால் போதும்…. முட்டை பூண்டு காரம் செய்வதற்கான ரெசிபி!

மீண்டும் நன்கு கலந்து கொடுத்து மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் தாராளமாக கொதித்து கடாயின் ஓரங்களில் நல்லெண்ணெய் பிரிந்து வந்தால் கத்தரிக்காய் ஊறுகாய் தயார்.