மணக்க மணக்க நல்லெண்ணெய் மிதக்கும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு!

கத்திரிக்காய் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறியாக மட்டுமில்லாமல் எளிதில் சமைக்க கூடிய காய்கறிகளிலும் ஒன்று. கத்திரிக்காய் சமைப்பதற்கு குறைந்தது 10 முதல் 15 நிமிடங்கள் தாராளமாக போதுமானது. இந்த முறை கத்திரிக்காய் வைத்து மணக்க மணக்க நல்லெண்ணெய் வாசத்தில் வறுத்து அரைத்த மசாலா வைத்து நல்லெண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க..

முதலில் 25 கிராம் அளவுள்ள புளியை வெதுவெதுப்பான தண்ணீரில் சேர்த்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும். குறைந்தது 10 முதல் 15 நிமிடம் புளி ஊறிய பிறகு அதை கரைத்து தனியாக தண்ணீர் மட்டும் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு தேக்கரண்டி கல்லுப்பு சேர்த்துக் கொள்ளலாம். அடுத்ததாக மசாலா பொருட்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

நான்கு தேக்கரண்டி குழம்பு மிளகாய் தூள், 250 கிராம் அளவுள்ள தக்காளிகளை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். தக்காளியை அரைத்தோ, நறுக்கியோ சேர்க்கக்கூடாது முழு தற்காலியாக சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக 250 கிராம் அளவுள்ள சின்ன வெங்காயம் எடுத்து நன்கு தட்டி கொள்ள வேண்டும். வெங்காயத்தை முழுமையாக அரைக்காமல் ஒன்றும் பாதியாக தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அதை கல்லில் ஒரு சிறிய துண்டு இஞ்சி, மூன்று பல் வெள்ளைப்பூண்டு, ஒரு பச்சை மிளகாய், இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து தட்டிக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு அகலமான சட்டியில் இரண்டு குழிக்கரண்டி அளவிற்கு நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு தேக்கரண்டி கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு, அரை தேக்கரண்டி வெந்தயம், ஒரு சிறிய துண்டு பெருங்காயம் சேர்த்து தலித்துக் கொள்ளலாம்.

காயல்பட்டினம் ரம்ஜான் ஸ்பெஷல் அக்காரா புளிப்பு! பாரம்பரிய ரெசிபி இதோ…

அடுத்து தட்டி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு மற்றும் கருவேப்பிலை விழுதுகளை எண்ணெயோடு சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது வெங்காயம் நன்கு வதங்கியதும் கழுவி சுத்தம் செய்து நறுக்கி வைத்திருக்கும் 300 கிராம் அளவுள்ள கத்திரிக்காய்களை சேர்த்துக் கொள்ளலாம்.

கத்தரிக்காய் பாதியாக வதங்கியதும் புளி கரைசலுடன் சேர்த்து பிணைந்து வைத்திருக்கும் தக்காளியையும் கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது மூடி போட்டு மிதமான தீயில் 10 முதல் 15 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும். கடாயின் ஓரங்களில் எண்ணை பிரிந்து வந்தால் குழம்பு தயாராக மாறி உள்ளது.
இப்பொழுது சுவையான எண்ணெய் மிதக்க மிதக்க நல்லெண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தயார்.