ஒரே ஒரு கத்திரிக்காய் போதும்… 15 நிமிடத்தில் கத்திரிக்காய் கொத்சு தயார்!

கத்திரிக்காய் பிரியர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் வரப்பிரசாதமாக இருக்கும். அதுவும் ஒரு கத்தரிக்காய் போதும் அருமையான கொத்சு செய்துவிடலாம். அதுவும் எளிமையாக குறைந்தது 15 நிமிடத்தில் இந்த ரெசிபி செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.

முதலில் நன்கு பெரிய பிஞ்சு கத்திரிக்காய் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை நன்கு கழுவி சுத்தம் செய்து துடைத்து கொள்ளவும். கத்திரிக்காயின் வெளிப்பக்கம் நீளவாக்கில் ஐந்து பாகங்களாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது கத்திரிக்காய் முழுவதும் தாராளமாக நல்லெண்ணெய் சேர்த்து தடவிக் கொள்ளலாம். அடுத்ததாக கத்திரிக்காயின் உள்பக்கம் ஐந்து பல் வெள்ளை பூண்டு, , காரத்திற்கு ஏற்ப இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் என்னை தடவிக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது இந்த கத்திரிக்காயை நெருப்பில் வாட்டி எடுக்க வேண்டும். நெருப்பு அனைத்து பக்கமும் சம அளவில் படும் விதத்தில் கத்திரிக்காயை வைக்க வேண்டும். குறைந்தது இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை அதன் பாகங்களை மாற்றி மாற்றி நெருப்பில் மாட்டி எடுத்துக் கொள்ளலாம்.

நெருப்பில் கத்திரிக்காயை வாக்கும் பொழுது இதனுடன் ஒரு தக்காளியை சேர்த்து வாட்டி கொள்ளலாம். கத்திரிக்காய் மற்றும் தக்காளியின் தோல் நன்கு கருகி வரும் நேரத்தில் அடுப்பை அணைத்து விடவும். சிறிது நேரம் கத்திரிக்காய் மற்றும் தக்காளியை அப்படியே ஆரவைக்க வேண்டும்.

அடுத்த அதன் மேல் பக்கம் இருக்கும் தோலை நீக்கி சுத்தம் செய்து கொள்ளலாம். இப்பொழுது இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு முறை பிளன்ட் செய்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது அரைத்த கத்திரிக்காய் விழுதுடன் இரண்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், அரை தேக்கரண்டி உப்பு, கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பஞ்சு போல மிருதுவான மற்றும் சத்து நிறைந்த கேரட் கேக் செய்வதற்கான ரெசிபி!

அடுத்ததாக ஒரு சிறிய கடாயில் ஒரு தேக்கரண்டி கடுகு எண்ணெய், ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து கிளறி இறக்கினால் சுவையான கத்திரிக்காய் கொத்சு தயார்.