வெங்காயம், தக்காளி என எதுவும் இல்லாமல் தல தலவென எண்ணெயோடு மிதக்கும் கத்திரிக்காய் கிரேவி!

கத்திரிக்காய் சிலருக்கு பிடிக்காத காய்கறிகளில் ஒன்றாக இருந்தாலும் அதை விரும்பியவாறு சமைத்துக் கொடுக்கும் பொழுது வேண்டாம் என மறுக்காமல் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த கத்திரிக்காய் வைத்து என்ன சமைத்தாலும் அதை விரும்பி சாப்பிடும் தனி ரசிகர் கூட்டமே உண்டு. கத்திரிக்காய் வைத்து எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு, கத்தரிக்காய் வறுவல், கத்தரிக்காய் கூட்டு, கத்திரிக்காய் கடைசல் என பல வகையான ரெசிபிகள் செய்திருந்தாலும் ஒருமுறை ஆவது வெங்காயம் தக்காளி இல்லாமல் கத்திரிக்காய் கிரேவி செய்யலாம் வாங்க.

ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி உளுந்தம் பருப்பு, , கால் தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

பருப்பின் நிறம் சிறிதளவு பொன்னிறமாக மாறியதும் இரண்டு தேக்கரண்டி முழு தனியா, ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி வேர்க்கடலை சேர்த்து வறுக்க வேண்டும். இதனுடன் பட்டை சிறிய துண்டு, கிராம்பு இரண்டு, ஏலக்காய் 2 சேர்த்துக் கொள்ளலாம்.

இறுதியாக காரத்திற்கு ஏற்ப காய்ந்த வத்தல் ஐந்து சேர்த்து வைக்க வேண்டும். இப்பொழுது அடுப்பை அணைத்துவிட்டு அதை சூட்டில் இரண்டு தேக்கரண்டி வெள்ளை எள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். எள் சேர்த்த பிறகு இதனுடன் கைப்பிடி அளவு தேங்காய், இரண்டு கொத்து கருவேப்பிலை, சிறிய நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து கலந்து அப்படியே ஓரமாக வைத்துவிடலாம்.

நாம் வறுத்து வைத்திருக்கும் பொருட்கள் அனைத்தும் நன்கு சூடு தணிந்தது ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைக்கும் பொழுது தேவைப்பட்டால் நன்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

மீண்டும் அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் நீளவாக்கில் அடுக்கி வைத்திருக்கும் நான்கு முதல் ஐந்து கத்திரிக்காய்களை சேர்த்துக் கொள்ளலாம். கத்தரிக்காயை எண்ணெயோடு சேர்த்து வதக்கும் பொழுது அரை தேக்கரண்டி உப்பு மற்றும் அரை தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

இந்த கத்திரிக்காய் கிரேவி செய்யும் பொழுது பிஞ்சு கத்திரிக்காய் பயன்படுத்தி சமைத்தால் சுவை அருமையாக இருக்கும். குறைந்தது ஒன்று முதல் இரண்டு நிமிடம் மிதமான தீயில் கத்திரிக்காயை வதக்க வேண்டும். அதன் பிறகு நாம் வறுத்தரைத்த மசாலாவை கத்திரிக்காய் உடன் சேர்த்துக் கொள்ளலாம்.

மசாலா சேர்த்து கலந்த பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் ஒருமுறை கிளறி கொடுத்து கொள்ளலாம். மிதமான தீயில் மூடி போட்டு ஐந்து முதல் ஏழு நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும். கடாயின் ஓரங்களில் எண்ணை பிரிந்து வந்தால் கத்திரிக்காய் கிரேவி தயார். இறுதியாக கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கினார் சாப்பிட கிரேவி தயாராக மாறியுள்ளது.

தோசை மாவு வைத்து இட்லி, தோசை, பணியாரம் என விதவிதமாக செய்யலாம்.. ஆனால் சட்னி செய்ய முடியுமா? ரெசிபி இதோ!

சூடான சாதத்தில் இந்த கத்திரிக்காய் கிரேவி சேர்த்து ஒரு தேக்கரண்டி நெய் கலந்து சாதத்தை செய்து சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும். மேலும் இதை தோசைக்கு சைடிஷ் ஆகவும் வைத்து சாப்பிடலாம். இந்த கிரேவி சமைப்பதற்கு தக்காளி வெங்காயம் என எதுவும் பயன்படுத்தாமல் செய்வதால் எளிமையான முறையில் சமைத்து முடித்து விட