நினைத்தாலே நாவில் எச்சில் ஊறும் எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி! வாங்க செய்த அசத்தலாம்…

தினம் தினம் நெல்லுச்சோறு, நெய் மணக்கும் கத்திரிக்காய் என பாடல் வரிகளில் குறிப்பிட்டிருப்பது போல கத்திரிக்காய்க்கு தனி சுவை உண்டு. இந்த கத்திரிக்காய் சுவையானதாக மட்டும் இல்லாமல் சத்து நிறைந்ததாகவும் சமைப்பதற்கு எளிதில் முடியக்கூடியதாகவும் இருப்பதால் பலர் இதை விரும்பி சமைப்பதும் சாப்பிடுவதும் உண்டு. அந்த வகையில் கத்திரிக்காய் வைத்து அருமையாக கிரேவி செய்வதற்கான ரெசிபியை பார்க்கலாம்.

முதலில் கிரேவி செய்வதற்கு தேவையான மசாலாவை தயார் செய்து கொள்ளலாம். அதற்கு ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு தேக்கரண்டி மல்லி, ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி மிளகு சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
இதை அடுத்து 10 முந்திரிப்பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக இதனுடன் ஒரு கப் துருவிய தேங்காய் சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

வறுத்த இந்த பொருட்களை தனியாக ஆற வைக்க வேண்டும். ஒரு தேக்கரண்டி செட்டிநாடு கறி மசாலா சேர்த்து நன்கு பிரட்டி மிக்ஸியில் சேர்த்து அரைக்க வேண்டும்.

மிக்ஸியில் அரைக்கும்போது இந்த கலவையுடன் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், 10 பல் வெள்ளைப்பூண்டு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.

இப்பொழுது 250 கிராம் கத்திரிக்காவை நன்கு கழுவி சுத்தம் செய்து நான்காக கீரி வைத்துக் கொள்ள வேண்டும். இதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை உள்ளே ஸ்டஃப் செய்து வைத்துவிடலாம். இந்த கத்திரிக்காய் 10 முதல் 15 நிமிடம் அப்படியே ஓரமாக இருக்க வேண்டும்.

அந்த நேரத்தில் மற்றொரு கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி சீரகம், 5 காய்ந்த வத்தல், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

இப்பொழுது மசாலா தடவி ஊற வைத்திருக்கும் கத்தரிக்காய் கடாயில் சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும். எண்ணெயோடு சேர்ந்து கத்தரிக்காய் நன்கு வதங்கி வர வேண்டும்.
ஐந்து நிமிடம் கழித்து நாம் மீதம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை கடாயில் சேர்த்து கத்தரிக்காய் உடையாத வண்ணம் நன்கு பிரட்டி கொடுக்க வேண்டும். அடுத்ததாக இப்பொழுது மசாலாக்களை சேர்த்துக் கொள்ளலாம்.

இதற்காக ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை கலந்து கொடுக்கவும்.

நாவிற்கு மட்டுமல்ல சுவைக்கும் விருந்தளிக்கும் செட்டிநாடு வெள்ளை அப்பம்… பொருத்தமான கார சட்னி!

அடுத்ததாக எலுமிச்சை பழ அளவு ஊறவைத்த புளி கரைசல், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளலாம். இப்பொழுது கிரேவிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். மிதமான தீயில் மசால்வை நன்கு கலந்து கொடுத்து கொதிக்க விட வேண்டும்.

10 முதல் 15 நிமிடம் நன்கு கொதித்ததும் இறுதியாக ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் மேலே சேர்த்து பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கினான் சுவையான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி தயார்.

Exit mobile version