தென்னிந்தியா உணவு முறைகளில் மிகவும் பிரசித்தி பெற்றது செட்டிநாடு உணவு முறைகள். நல்ல காரத்துடன் முறையான பக்குவத்தில் தயாராகும் ஒவ்வொரு உணவு வகைகளும் ஒருமுறை சுவைத்தாலே மீண்டும் சாப்பிடும் ஆசையை ஏற்படுத்தக் கூடியது. அந்த வகையில் இப்பொழுது காலை மற்றும் மாலைகளின் எளிமையாக செய்யக்கூடிய ஸ்னாக்ஸ் வகைகளில் ஒன்றான செட்டிநாடு வெள்ளை அப்பம் அதற்கு பொருத்தமான காரச் சட்னி செய்வதற்கான ரெசிபியை இதில் பார்க்கலாம்….
ஒரு கப் அளவு பச்சரிசி எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் அளவு கொள்ளும் பாத்திரத்தில் தலை பகுதி வரை அரிசி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் மேல் பகுதி கோபுர வடிவத்தில் வரும்வரை உளுந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது தலை தட்டும் அளவிற்கு அரிசியும் அதன் மேல் பக்கம் உளுந்து இருக்கும் விதத்தில் அரிசி மற்றும் உளுந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதற்கு பதிலாக ஒரு கப் பச்சரிசிக்கு இரண்டு தேக்கரண்டி உளுந்து எடுத்துக் கொள்ளலாம். அரிசி மற்றும் உளுந்துவை இரண்டு முறை நன்கு கழுவி சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
குறைந்தது மூன்று மணி நேரம் அரிசி மற்றும் உளுந்து ஊற வேண்டும். இந்த நேரத்தில் நம் காரச் சட்னிக்கு தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.
நன்கு பழுத்த இரண்டு பெரிய தக்காளி பழம், 10 முதல் 15 சின்ன வெங்காயம், ஒரு பெரிய வெங்காயம், காரத்திற்கு ஏற்ப ஐந்து முதல் 8 காய்ந்த வத்தல், சிஏ எலுமிச்சை பல அளவு புளி, பதினைந்து பல் வெள்ளை பூண்டு மற்றும் அரை தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைக்கும் பொழுது தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். அடுத்ததாக ஒரு சிறிய கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு காய்ந்த வத்தல், கைப்பிடி அளவு கருவேப்பிலை, கால் தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
இந்த தாளிப்புடன் நாம் அரைத்து வைத்திருக்கும் காரச் சட்னி விழுதுகள் சேர்த்து மிதமான தீயில் ஐந்து முதல் ஏழு நிமிடம் வரை கலந்து கொடுக்க வேண்டும். காரச் சட்னியின் உள்ள தண்ணீர் வற்றி கெட்டியான பதத்திற்கு வந்தால் சட்னி தயாராக மாறிவிட்டது.
அடுத்ததாக மணி நேரம் கூறி இருக்கும் அரிசி மற்றும் உளுந்தை மீண்டும் ஒருமுறை சுத்தம் செய்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
வறுத்து அரைத்த மசாலா வைத்து காரசாரமாக மிதமான புளிப்புடன் வாய்க்கு ருசியான வத்தக் குழம்பு சாதம்!
அரைத்த மாவை ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.இதனுடன் அரை தேக்கரண்டி உப்பு, கால் தேக்கரண்டி சோடா உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த மாவு தோசை மாவு பதத்தை விட சற்று தண்ணீராக இருக்கும் அளவிற்கு மாற்றிக் கொள்ளலாம்.
ஒரு அகலமான கடாயில் பொறித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் தீயை மிதமான அளவில் வைத்து ஒரு குழி கரண்டி அளவு மாவு எடுத்து கடாயில் ஊற்ற வேண்டும். எண்ணெயை மேலே தெளித்து பொன்னிறமாக வரும் வரை முன்னும் பின்னும் பொறித்து எடுக்க வேண்டும். சுவையான வெள்ளை அப்பம் தயார்.