முடி உதிர்வு, இளநரை, முடி அடர்த்தி இல்லாமல் இருப்பது போன்ற பிரச்சனைகளுக்கு கருவேப்பிலை சாப்பிடுவதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும். கருவேப்பிலையின் முடி உதிர்வுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் பல உள்ளது. இந்த முறை கருவேப்பிலை வைத்து எல்லா பிரச்சனைக்கும் தீர்வாக அமையும் விதமாக அருமையான குழம்பு ரெசிபி செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…
இந்த கருவேப்பிலை குழம்பு செய்வதற்கு முதலில் ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடுபடுத்திக் கொள்ள வேண்டும். அதில் இரண்டு கைப்பிடி அளவிற்கு கழுவி சுத்தம் செய்த கருவேப்பிலைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். தாராளமாக கருவேப்பிலை சேர்த்து ஒரு முறை வதைக்கி கொள்ள வேண்டும்.
அடுத்ததாக அதில் இரண்டு பல் வெள்ளை பூண்டு, ஒரு தேக்கரண்டி மிளகு சேர்த்து நல்ல முறுமுறுவென வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் வருத்த பொருட்கள் சிறிது நேரம் ஆற வைத்து அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக அதே கடாயில் தாராளமாக ஒரு குழி கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு, கால் தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்து 15 முதல் 20 சின்ன வெங்காயம், ஐந்து பல் வெள்ளை பூண்டு, இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதங்கிய பிறகு பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி பழங்கள் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். தேவைப்பட்டால் மூன்று பழம் கூட சேர்த்துக் கொள்ளலாம். தக்காளி வதங்கும் பொழுது அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். தக்காளி மசிந்து வரும் நேரத்தில் மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.
எப்படி இருக்குமோ… என குழப்பமே இல்லாமல் சாப்பிடத் தூண்டும் சுவையில் மாம்பழம் பட்டர் மசாலா!
இதற்காக இரண்டு தேக்கரண்டி சாம்பார் தூள், முதலில் நாம் வறுத்து அரைத்த கருவேப்பிலை மசாலா இரண்டு தேக்கரண்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். மசாலாக்களை ஒரு சேர நன்கு கலந்து பிறகு எலுமிச்சை பல அளவு ஊறவைத்த புளி கரைசல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு ஒரு முறை சரிபார்த்து மூடி போட்டு மிதமான தீயில் 15 நிமிடம் கொதிக்க விட வேண்டும். 15 நிமிடம் கழித்து கலந்து கொள்ளும் பொழுது கடாயின் ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வந்தால் குழம்பு தயாராக மாறிவிட்டது. இறுதியாக ஒரு தேக்கரண்டி வெல்லம் சேர்த்து கலந்து கொடுத்து இறக்கிக் கொள்ளலாம்.