அசைவ பிரியர்களுக்கு நெத்திலி கருவாடு உப்புச்சாறு ரெசிபி கொண்டாட்டமாக இருந்தாலும் சைவ பிரியர்களுக்கு சற்று வருத்தமாகவே இருக்கும். ஆனால் இந்த பக்குவத்தை பயன்படுத்தி கருவாடு மட்டும் சேர்க்காமல் சைவப் பிரியர்களும் இந்த உப்புச்சாறு ரெசிபியை செய்து சாப்பிடலாம். வாங்க இச்சில் வரும் சுவையில் காரசாரமான புளிப்பு நிறைந்த நெத்திலி கருவாடு உப்புச் சாறு ரெசிப்பி செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…
ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடு படுத்தி கொள்ள வேண்டும். இதில் அரை தேக்கரண்டி வெந்தயம், அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக இரண்டு முதல் மூன்று பல் வெள்ளை பூண்டு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.
வெங்காயம் வதங்கும் நேரத்தில் ஆறு பெரிய பச்சை மிளகாயை இரண்டாக கீரி கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உப்புச்சாறு ரெசிப்பிக்கு மிளகாயின் காரம் மட்டுமே பயன்படுத்த உள்ளதால் கரத்திற்கு ஏற்ப மிளகாய் கூடுதலாகவும் சேர்த்துக் கொள்ளலாம்.
மிளகாய் வதங்கும் நேரத்தில் ஒரு கொத்து கருவேப்பிலை, நன்கு பொடியாக நறுக்கிய தக்காளி பழம் ஒன்று சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். இந்த நேரத்தில் நம் காய்ந்த நெத்திலி கருவாடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நெத்திலி கருவாடு சமைப்பதற்கு பயன்படுத்துவதற்கு முன்பாக 10 முதல் 15 நிமிடம் கொதிக்கும் தண்ணீரில் ஊறவைத்து ஒன்று இரண்டு முறை கழுவி பயன்படுத்தினால் உப்பு மற்றும் அதன் நெடி சற்று குறைவாகவே இருக்கும்.
கருவாடு சேர்த்து ஒரு நிமிடம் நன்கு களரி கொடுத்த பிறகு ஒரு தேக்கரண்டி கல்லுப்பு, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி கொடுக்க வேண்டும். மசாலாவின் பச்சை வாசனை சென்றவுடன் சிறிய எலுமிச்சை பல அளவு ஊறவைத்த புளிக்கரைசலை சேர்த்துக் கொள்ளலாம்.
நான்கு முட்டை மட்டும் இருந்தால் போதும்…. முட்டை பூண்டு காரம் செய்வதற்கான ரெசிபி!
இதனுடன் கூடுதலாக மூன்று கப் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பார்ப்பதற்கு ரசம் போல தண்ணியாக இருந்தால்தான் உப்புச்சாறு சுவையாக இருக்கும். பத்து முதல் 15 நிமிடம் நன்கு தண்ணியாக கொதிக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து கைப்பிடி அளவு கொத்தமல்லித்தளை தூவி இறக்கினால் சுவையான நெத்திலி கருவாடு உப்புச் சாறு தயார்.
சூடான சாதத்தில் இத உப்புச்சாறு வைத்து சாப்பிடும் பொழுது எளிதில் செரிமானம் ஆகி உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். சைவ விரும்பிகளுக்கு இதில் கருவாடு பயன்படுத்தாமல் அதே ரெசிபியில் செய்து சாப்பிடலாம்.