புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த காராமணி வைத்து அருமையான பிரியாணி ரெசிபி!

சத்து நிறைந்த பொருட்களை சாப்பிட வேண்டும் என ஆசை இருந்தாலும் அதை மனதிற்கு பிடித்தவாறு செய்து சாப்பிடுவதில் பல குழப்பம் உள்ளது. எப்போதும் போல ஒரே மாதிரியாக சமைத்து சாப்பிடாமல் சற்று வித்தியாசமாக புதுவிதத்தை கலந்து சமைத்து சாப்பிடும் பொழுது முறையான சத்து மற்றும் சுவை நமக்கு கிடைக்கிறது. இந்த முறை ப்ரோட்டீன் மற்றும் நார்ச்சத்திற்கு குறைவே இல்லாத காராமணி வைத்து அருமையான பிரியாணி செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பிரியாணி செய்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாகவே காராமணியை தேவையான அளவு தண்ணீர் கலந்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.குறைந்தது 12 மணி நேரம் காராமணி தண்ணீரில் நன்கு ஊறிய பிறகு தண்ணீரை வடித்து ஒரு வெள்ளைத் துணியில் மாற்றி முளை விட வைக்க வேண்டும். இப்பொழுது 24 மணி நேரத்தில் காராமணி நன்கு முளை விட்டு முலை பயிராக நமக்கு கிடைக்கும்.

பிரியாணி செய்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே இரண்டு கப் பாஸ்மதி அரிசியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து பிரியாணி மசாலா செய்வதற்கு பட்டை இரண்டு துண்டு, கிராம்பு 3, ஏலக்காய் 4, மிளகு அரை தேக்கரண்டி, பெருஞ்சீரகம் அரை தேக்கரண்டி, அண்ணாச்சி பூ ஒன்று, கல்பாசி சிறிதளவு, ஜாதிபத்திரி சிறிதளவு இவற்றை ஒரு கடாயில் சேர்த்து நல்ல வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது நாம் வறுத்த பொருட்களை சிறிது நேரம் ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக பொடி செய்து கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு குக்கரை எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து சூடுபடுத்திக் கொள்ளலாம்.

இதில் இரண்டு பிரியாணி இலை, இரண்டு துண்டு பட்டை, இரண்டு ஏலக்காய் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக நீளவாக்கில் மிகப் பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

வெங்காயம் வதங்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி உப்பு மற்றும் 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி கொள்ளலாம். இஞ்சி மற்றும் பூண்டு விழுதுவின் பச்சை வாசனை சென்றவுடன் இரண்டு பச்சை மிளகாய் மிக்ஸியில் அரைத்து விழுதுகளாக குக்கரில் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.

வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி பழம் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். வெங்காயம் மற்றும் தக்காளி நன்கு ஒரு சேர வதங்கி வரும் நேரத்தில் ஒரு கைப்பிடி அளவு புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்துக் கொள்ளலாம். இந்த நேரத்தில் மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.

எப்போதும் ஒரே மாதிரியாக முட்டை சாதம் செய்யாமல் ஒரு முறை தேங்காய் முட்டை சாதம் செய்து பாருங்கள்…

இதற்காக ஒரு தேக்கரண்டி குழம்பு மிளகாய் தூள், நாம் முதலில் வறுத்து அரைத்த பிரியாணி மசாலா ஒரு தேக்கரண்டி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். மசாலாவின் பச்சை வாசனை சென்றவுடன் நாம் முளைக்கட்டி வைத்திருக்கும் காராமணியை குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். காராமணி சேர்த்த பிறகு மசாலா ஓடு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இதை அடுத்து ஊற வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியை குக்கரில் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இரண்டு கப் பார்ப்பது அரிசிக்கு மூன்று கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மிதமான தீயில் இரண்டு விசில்கள் வரும் வரை வேக வைக்க இறக்கினால் சுவையான காராமணி பிரியாணி தயார். இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து பிரியாணியை எடுத்துட்டு வாகிளறி இறக்கினால் சாப்பிட தயாராக மாறி உள்ளது.