தள்ளுவண்டி கடை கார தக்காளி சட்னி செய்யலாமா! ரெசிபி இதோ…

வீட்டில் என்னதான் பார்த்து பார்த்து விதவிதமான சட்னிகள் அரைத்தாலும் ரோட்டு கடைகளில் மட்டுமே கிடைக்கும் காரச் சட்னிக்கு தனி மவுசுதான். அந்த சட்னி பார்ப்பதற்கு நல்ல செக்கச்சிவையில் என நிறத்திலும் நல்ல காரசாரமாக தண்ணியாக இருந்தாலும் சுவைக்கே குறையே இல்லாமல் அருமையாக இருக்கும். மூன்று இட்லி சாப்பிடுபவர்கள் கூட இந்த சட்னியை வைத்து 10 இட்லி சாப்பிடுவார்கள். வாங்க அதே சுவையில் ரோட்டு கடை தள்ளுவண்டி ஸ்டைல் தக்காளி சட்னி செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் காரத்திற்கு தேவையான காய்ந்த வத்தல் நான்கு அல்லது ஆறு எடுத்துக் கொள்ள வேண்டும் அதை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து குறைந்தது ஐந்து முதல் பத்து நிமிடம் ஊற வைத்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைக்க காய்ந்த வத்தல், பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி பழம், ஒரு பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது, மூன்று பல் வெள்ளை பூண்டு, அரை தேக்கரண்டி கல்லுப்பு சேர்த்து மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக தாலித்திற்கு ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக இரண்டு காண்பவர்கள், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளலாம்.

இறுதியாக நாம் அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதுகளை கடாயில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த சட்னியை மிதமான தீயில் நன்கு கொதிக்க விட வேண்டும். நன்கு நுரைத்து கொதித்து வரும் நேரத்தில் அடுத்து குறைத்து கொள்ளலாம்.

தாராளமாக புரோட்டின் சத்து நிறைந்த சுண்டல் சூப் குழம்பு! ரெசிபி இதோ….

இந்த நேரத்தில் மூன்று தேக்கரண்டி அல்லது அரை கப் தோசை மாவு கலவையை சட்னியுடன் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்பொழுது சுவையான ரோட்டு கடை தக்காளி சட்னி தயார். இந்த சட்னி சாப்பிடுவதற்கு நல்ல காரணமாகவும் சுவையாகவும் இருப்பதால் இட்லி, தோசை என கணக்கில்லாமல் சாப்பிடலாம்.