பாட்டி மட்டுமில்லாமல் கொள்ளுப்பாட்டுக்கு மட்டுமே தெரிந்த ரகசிய ரெசிபி!

பாரம்பரிய உணவுகள் நம் வீட்டில் உள்ள அம்மா, பாட்டிக்கு கூட சில நேரங்களில் தெரியாது. அந்த கைப்பக்குவம் வீட்டில் வயதில் மூத்த கொள்ளுப்பாட்டுக்கு மட்டுமே தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட ரகசிய ரெசிபி ஒன்றை’தொகுப்பில் பார்க்க உள்ளோம். சமைப்பதற்கு மிக எளிதாகவும் சீக்கிரம் ஜீரணமாகும் விதத்திலும் அனைவருக்கும் பிடிக்கும் விதத்திலும் அமைந்திருக்கும் கழனி சாறு ரெசிபி..

இந்த ரெசிபி செய்வதற்கு மிகவும் முக்கியமாக தேவைப்படுவது அரிசி களைந்த தண்ணீர். அதாவது சாதத்திற்கு அரிசியை ஊறவைக்கும் பொழுது தேவையான அளவு தண்ணீர் கலந்து சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அரிசி களைந்த தண்ணீர் வைத்து மட்டுமே இந்த ரெசிபி சமைக்க முடியும்.

அப்படி ஒரு கப் அளவிற்கு தேவையான அளவு அரிசி களைந்த தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம். பல அளவு புளியை சேர்த்து ஊற வைத்து கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடு படுத்தி கொள்ள வேண்டும்.

இதில் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, அரை தேக்கரண்டி சீரகம், கால் தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்து கரத்திற்கு ஏற்ப இரண்டு அல்லது மூன்று பச்சை மிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்து பொடியாக நறுக்கிய 10 சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் வதங்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளலாம். அடுத்ததாக அரை தேக்கரண்டி மஞ்சள்தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

ரெஸ்டாரன்ட் சுவையில் பச்சை நிறம் சிறிதும் மாறாமல் அருமையான பாலக் பன்னீர் ரெசிபி!

இறுதியாக அரிசி களைந்த தண்ணீரில் நாம் கரைத்து வைத்திருக்கும் புளி கரைசலை சேர்த்து நன்கு கலந்து கொடுத்து கொதிக்க விட வேண்டும். மிதமான தீயில் இரண்டு முதல் மூன்று நிமிடங்களில் நன்கு கொதித்து வரும் பொழுது கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி கலந்து கொள்ளலாம். இப்பொழுது சுவைக்கேற்ப இறுதியாக ஒரு முறை உப்பு சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது நமக்கு தேவையான கழனி சாறு தயார்.. சூடான சாதத்தில் இந்த குழம்பு சேர்த்து அப்பளம் அல்லது முட்டை வைத்து சாப்பிடும் பொழுது எளிமையாக இருந்தாலும் சாப்பிடும் சுவை பெரிய திருப்தியை ஏற்படுத்தும். மேலும் இந்த குழம்பு எளிதில் ஜீரணமாக கூடிய சக்தி கொண்டதால் வயிறு மந்தமாக இருக்கும் சமயங்களில் இது போல செய்து சாப்பிடலாம்.