அற்புதங்கள் செய்யும் அகத்திக்கீரை சூப்… வாரம் ஒரு முறை இப்படி செய்து சாப்பிட மறக்காதீர்கள்!

அகத்திக்கீரை இரும்புச்சத்து நிறைந்துள்ள ஒரு கீரை வகையாகும். உடலுக்குத் தேவையான 63 வகையான சத்துக்கள் இந்த கீரையில் அடங்கியுள்ளதாக சித்த மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் அகத்திக் கீரையில் கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் எலும்பு மற்றும் பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. பித்த சம்பந்தப்பட்ட நோய்களை அகத்திக்கீரை குணப்படுத்தும் மேலும் செரிமான சக்தியை அதிகரிக்கும். மலச்சிக்கல் சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்த்துவைக்கும்.

அருமை…! மூட்டு வலி பிரச்சனைகளை முற்றிலும் நீக்கும் முடக்கத்தான் கீரை ரசம்!

வாரம் ஒரு முறை இந்த அகத்திக் கீரையை உணவில் சேர்த்து வர உடல் சூடு தணிந்து கண்கள் குளிர்ச்சி பெறுகின்றது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அகத்திக்கீரை நல்ல மருந்தாக செயல்படுகிறது. தொண்டை வலி குடல் புண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் அகத்திக்கீரை குணப்படுத்தும். இத்தனை நன்மைகள் நிறைந்த அகத்திக் கீரையை வைத்து எப்படி அருமையான சூப் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

அகத்திக்கீரை சூப் செய்யும் முறை:

வல்லமை தரும் வல்லாரைக் கீரையில் இப்படி துவையல் அரைத்துப் பாருங்கள்…! குழந்தைகள் கூட சாப்பிடுவார்கள்!

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அத்துடன் அரிசி கழுவிய தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும். அரைக்கட்டு அகத்திக் கீரையை தண்ணீரில் அலசி பிழிந்து எடுத்து ஏற்கனவே கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கவும்.

ஆறு நறுக்கிய சின்ன வெங்காயம், இரண்டு நாட்டு தக்காளிகள், 3 பச்சை மிளகாய், சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். இதை ஒரு மூடி போட்டு சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.

இப்பொழுது 5 பல் பூண்டை ஒன்று இரண்டாக தட்டி இதனுடன் சேர்க்க வேண்டும். அடுத்து ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மிளகு இரண்டையும் பொடித்து இதனுடன் சேர்த்துக் கொள்ளவும். நன்கு கொதிக்க விட வேண்டும்.

உடல் சூட்டை தணிக்கும் வெந்தயக் கஞ்சி…! சத்தான வெந்தயக் கஞ்சி செய்வது எப்படி?

இறக்குவதற்கு முன்பு ஒரு டம்ளர் தேங்காய் பால் ஊற்றி கிளறி இறக்கி சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும். இதை நீங்கள் அப்படியே பருகலாம் அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.

அவ்வளவுதான் அற்புதமான அகத்திக்கீரை சூப் தயார்!

Exit mobile version