தற்போது உள்ள பருவநிலை மாற்றத்தில் பலருக்கும் சளி, இருமல் என பல்வேறு தொந்தரவுகள் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. என்னதான் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் சளி தொல்லையில் இருந்து விடுதலை கிடைத்த பாடு இல்லை. குழந்தைகளிலிருந்து பெரியவர் வரை இந்த சளித்தொல்லையால் அவதிப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறார்கள். இந்த சளி தொல்லையில் இருந்து விடுதலை பெறுவதற்கு ஒரு அருமையான கசாயம் தான் வெற்றிலை கசாயம். வாருங்கள் இந்த வெற்றிலை கசாயம் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தொண்டை கரகரப்புக்கு இனி கவலை வேண்டாம்… இதோ சளி இருமலுக்கு இதமான சுக்கு மல்லி காபி…!
வெற்றிலை கசாயம் செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த தண்ணீரில் 5 வெற்றிலைகளை சிறு சிறு துண்டாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து கொள்ளவும். இஞ்சியை சேர்க்கும்போது நன்கு தட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அரை ஸ்பூன் அளவிற்கு மிளகு எடுத்து அதையும் இடித்து சேர்த்துக் கொள்ளவும்.
கால் ஸ்பூன் அளவிற்கு சீரகத்தை எடுத்து இடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றுடன் முழு மல்லி முக்கால் ஸ்பூன் அளவிற்கு எடுத்து அதையும் ஒன்றிரண்டாக இடித்து சேர்த்துக் கொள்ளவும். இவை அனைத்தும் நன்கு கொதித்து வற்றி வரவேண்டும். நாம் சேர்த்த இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளராக வரும் அளவிற்கு நன்கு வற்ற வேண்டும்.
சளித்தொல்லையை விரட்டி அடித்து உடலுக்கு நன்மை தரும் கண்டதிப்பிலி ரசம்…!
வெற்றிலை, இஞ்சி, மிளகு, சீரகம், மல்லி ஆகியவை நன்கு கொதித்து அதன் சாறு முழுமையும் தண்ணீரில் இறங்கி தண்ணீர் பாதியானது படுக்கை அணைத்து விடலாம். இப்பொழுது இதனை வடிகட்டி பருகலாம். விருப்பப்பட்டால் நாட்டுச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து இதனை பருகலாம். இந்த கஷாயத்தை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் சளி தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். அதீத சளி தொல்லையால் அவதி உறுபவர்கள் வாரம் இரு முறை இந்த கஷாயத்தை பருகலாம்.