வாழைப்பழத்தில் இந்த ஸ்மூத்தி செஞ்சு கொடுங்க ஒரு சொட்டு கூட மிச்சம் வைக்க மாட்டாங்க… குழந்தைகளுக்கு சத்தான சுவையான வாழைப்பழ ஸ்மூத்தி!

தினமும் காலை பொழுதை ஆரோக்கியமாக தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இப்பொழுது பலரிடமும் வலுத்து உள்ளது எனவே தான் டீ காபி காலை கண்விழித்ததும் குடிக்க நினைக்கும் பலரும் இப்பொழுது அதற்கு மாற்றாக ஆரோக்கியம் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறார்கள் ஆனால் காலை எழுந்ததும் புத்துணர்ச்சியாக எதையேனும் குடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு இந்த ஸ்மூத்தி ஒரு நல்ல தீர்வு.

நன்மைகள் நிறைந்த வெள்ளரிக்காய் சாலட்.. வாரத்தில் 4 முறையாவது இதை எடுத்துக் கொள்ளுங்கள்!

புத்துணர்ச்சியோடு உடலுக்கு தேவையான விட்டமின்கள் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் என அனைத்தையும் அள்ளித் தரக்கூடியது இந்த ஸ்மூத்தி வகைகள். குடல் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் மேலும் மலச்சிக்கல் தொந்தரவிலிருந்து விடுபடவும் ஸ்மூதி பெருமளவில் உதவி புரிகிறது இந்த ஸ்மூதி ஆரோக்கியமானது மட்டுமின்றி சுவை நிறைந்ததாகவும் இருப்பதால் குழந்தைகளும் இதை விரும்பி உண்பார்கள். இந்த ஸ்மூத்தியை விதவிதமான பொருட்களைக் கொண்டு வித்தியாசமாக பல வகைகளில் செய்யலாம். இன்று வாழைப்பழத்தைக் கொண்டு எப்படி வாழைப்பழ ஸ்மூதி செய்யலாம் என்பதை பார்ப்போம் இதை செய்வது மிக மிக சுலபம்.

இதற்கு நன்கு பழுத்த நான்கு வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பழத்தை தோல் நீக்கி துண்டு துண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். 10ல் இருந்து 12 பேரிச்சம் பழத்தை எடுத்து விதை நீக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் 12 பாதங்களை தண்ணீரில் ஊற வைத்து தோல் உரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய வாழைப்பழம் விதை நீக்கிய பேரிச்சம் பழம் ஊறவைத்து தோல் உரித்த பாதம் அனைத்தையும் சேர்த்து மூன்று ஸ்பூன் அளவிற்கு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும் பேரிச்சம் பழத்தின் இனிப்பே போதுமானது என நினைத்தால் சர்க்கரை சேர்க்கத் தேவையில்லை. இதனுடன் நன்கு காய்ச்சி ஆற வைத்த பாலை சேர்க்கவும்.

குழந்தைகளுக்கு சத்தான சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெசிபி…! இனிப்பு தோசை!

இவை அனைத்தையும் நன்கு அரையும் படி மிக்ஸியில் அடித்துக் கொள்ள வேண்டும். பெரியவர்கள் விருப்பப்பட்டால் இதனுடன் ஐஸ் க்யூட் சேர்த்து அடித்துக் கொள்ளலாம் குழந்தைகளுக்கு ஐஸ் க்யூப் தேவையில்லை. அனைத்தையும் நன்கு அடித்த பிறகு ஒரு கிளாசில் ஊற்றி இதன் மீது விருப்பப்பட்ட நட்ஸ்களை பொடி செய்து தூவி பரிமாறலாம்.

அவ்வளவுதான் சுவையான சத்தான வாழைப்பழ ஸ்மூதி தயார்.