தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் கடவுள் வழிபாட்டின் பொழுது கரும்பு வைத்து வழிபடுவது வழக்கமான ஒன்று. அப்படி வாங்கிய கரும்பு அதிகமாக மீந்து விட்டதா.. கவலையே வேண்டாம். கரும்பு வைத்து அருமையான அல்வா செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…
முதலில் ஒரு பெரிய கரும்பு துண்டை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சாறு தனியாக சக்கை தனியாக பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் அரை கப் வெல்லம் சேர்த்து கால் கப் தண்ணீர் கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும். ஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி கான்பிளார் மாவு, இரண்டு தேக்கரண்டி கோதுமை மாவு சேர்த்து கொள்ள வேண்டும்.
இதில் தேவையான அளவு கரும்பு சாறு சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து கைப்பிடி அளவு முந்திரி மற்றும் கைப்பிடி அளவு திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
மீண்டும் அதே கடாயின் மீதம் இருக்கும் நெய்யுடன் கரும்பு சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும். கரும்பு சாறு நன்கு கொதித்து வரும் நேரத்தில் நாம் கரைத்து வைத்திருக்கும் மாவை இதமான தீயில் வைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மாவு சேர்த்து நன்கு கலந்த பிறகு வெல்லம் பாகு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். வெல்லம் சேர்த்த பிறகு கைவிடாமல் தொடர்ந்து கலந்து கொடுக்க வேண்டும். இல்லை என்றால் மாவு சட்டி கட்டியாக மாறி அல்வா பதத்திற்கு கிடைக்காது.
ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத சத்து நிறைந்த போங்குரா பச்சடி! ரெசிபி இதோ…
10 முதல் 15 நிமிடம் தொடர்ந்து கிளற வேண்டும். இதில் வாசனைக்காக அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து கொள்ளலாம். இறுதியாக மாவு கடாயில் ஒட்டாமல் கெட்டியான பதத்திற்கு வந்தால் அல்வா தயாராக மாறி உள்ளது.
இந்த நேரத்தில் நாம் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சை பழங்களை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான கரும்புச்சாறு அல்வா தயார்.