ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத சத்து நிறைந்த போங்குரா பச்சடி! ரெசிபி இதோ…

கீரைகளை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளும் பொழுது விட்டமின் ஏ சத்து முழுமையாக கிடைத்து நல்ல கண் பார்வை, இளநரை பிரச்சனை, முடி உதிர்விலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்வை வாழ முடியும். இந்த முறை கோங்குரா கீரை வைத்து அருமையான பச்சடி செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.. மேலும் இந்த ரெசிபி ஒரு மாதம் ஆனாலும் வைத்து சாப்பிடும் அளவிற்கு சுவை கூடுதலாகவே இருக்கும்.

முதலில் ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி தனியா, ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து நல்ல வறுத்துக்கொள்ள வேண்டும்.

இறுதியாக ஒரு தேக்கரண்டி கடுகு, காரத்திற்கு ஏற்ப மூன்று அல்லது ஐந்து காய்ந்த வத்தல் சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த பொருட்களை சிறிது நேரம் ஆற வைத்த பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக மாற்றி எடுத்துக் கொள்ளலாம்.

மீண்டும் அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் புளிச்சக்கீரையை தண்ணீரில் நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடிகட்டி கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கடாயில் வதக்கும் பொழுது தண்ணீர் சேர்க்காமல் வதக்க வேண்டும்.

இரத்தத்தின் சர்க்கரை அளவை குறைத்து கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் மருந்து துவையல்!

கீரை பாதியாக வழங்கிய பிறகு அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளலாம். அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில் ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை மிதமான தீயில் கீரையை நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

கீரை நன்கு வதங்கிய பிறகு நாம் வறுத்து அரைத்து வைத்திருக்கும் மசாலா இரண்டு தேக்கரண்டி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். மிதமான சூட்டில் ஒரு நிமிடம் வரை கலந்து கொடுத்து இறக்கினால் சுவையான கோங்குரா பச்சடி தயார். இந்த பச்சடி சாப்பிடுவதற்கு சுவையானதாக மட்டும் இல்லாமல் ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாததால் நீண்ட நாட்கள் வைத்து சாப்பிடலாம்.

Exit mobile version