கொய்யாப்பழம் பிடிக்காது என சொல்லும் குழந்தைகளுக்கு.. இனிப்பான கொய்யபழத்தில் அல்வா செய்யலாம் வாங்க..

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பல வகைகளில் கொய்யாப்பழமும் ஒன்று. தினமும் குறைந்தது ஒரு கொய்யாப்பழத்தை நாம் சாப்பிட வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இந்த கொய்யா பழத்தில் அதிகப்படியான விதைகள் இருக்கும். இதனால் சில குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவது இல்லை வேண்டாம் என ஒதுக்குவார்கள். இப்படி ஒதுக்கும் குழந்தைகளுக்கு இந்த கொய்யாப்பழத்தை வைத்து அருமையான அல்வா செய்து கொடுத்துப்பாருங்கள். அதன் சுவையில் மயங்கி மீண்டும் வேண்டும் என கேட்கும் அளவிற்கு அமிர்தமாக இருக்கும். கொய்யாப்பழ அல்வா செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ.

இந்த அல்வா செய்வதற்கு மூன்று கொய்யாப்பழங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பழம் நன்கு பழுத்ததாக இருக்க வேண்டும். அதன் தோள்களை நீக்கி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளலாம்.

சிறு துண்டுகளாக நறுக்கிய கொய்யாப்பழத்தை இட்லி பாத்திரத்தில் வைத்து 10 முதல் 15 நிமிடங்கள் ஆவியில் நன்கு வேக வைக்க வேண்டும். நன்கு வெந்த பழங்களை ஒரு தட்டிற்கு மாற்றி சிறிது நேரம் ஆற வைக்க வேண்டும்.

அதன் பின் இவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்து இந்த விழுதுகளை சல்லடை கொண்டு சலித்து தனியாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஹோட்டல் ஸ்டைல் செஸ்வான் சிக்கன்… அட்டகாசமான ரெசிபி இதோ….

அகலமான கடாயில் கொய்யாப்பழ விழுதுகள் ஒரு கப் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு கப் விழுதிற்கு ஒரு கப் சர்க்கரை என்ற விதத்தில் சர்க்கரையையும் அதனுடன் சேர்த்து மிதமான தீயில் கலந்து கொடுக்க வேண்டும். சர்க்கரை நன்கு கரைந்து மாவுடன் சேர்ந்து கெட்டியாக வரும் நேரத்தில் பாதி எலுமிச்சை பழச்சாறு பிழிந்து கலந்து கொள்ளவும்.

மிதமான தீயில் இந்த கலவையை ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின் ஒரு தேக்கரண்டி வெண்ணெய், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து கொடுக்கவும். இறுதியாக தேவைப்பட்டால் ஃபுட் கலர் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவை கடாயில் ஒட்டாமல் நன்கு திரண்டு அல்வா பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடலாம்.

ஒரு அகலமான தட்டில் நெய் தடவி இந்த அல்வாவை அதன் மேல் சேர்த்து பரப்பிவிட்டு தேவையான வடிவத்தில் வெட்டி எடுத்தால் சுவையான கொய்யா அல்வா தயார்.

Exit mobile version